சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Saturday, 7 March 2020

மீனவர்கள் வாழ்க்கை

இரும்பை
கரைக்கும்
இதயத்தை
சுருக்கும்
உப்புதான்
இவர்கள் வாழ்க்கை...


அத்தரும்
அரிதாரமும்,
இவர்களுக்கு
வெடுக்குக் கலந்த
சேறும் சகதியும்தான்...

பசியால் துடித்தும்
பாசியில் புரண்டும்
பாதி வாழ்க்கை
கழிகிறது...

மீதி வாழ்க்கை
கடலில்
பயணிக்கிறது...

இயற்கைச் சீற்றம்
ஒரு புறம்!
இலங்கைத் தாக்கம்
மறுபுறம்!













இரவும் பகலும்
இன்னல்களே இந்நாட்டில்!
வலை வீசச் சென்ற
அப்பா...
கொலையுண்டு
கிடக்குத்தப்பா!
இது தப்பா?

மழைப் பொழிய
புயல் காற்று வீச...
நடுக்கடலில்
நடுக்கத்துடன்
நிற்கும் தனியொருவனே!

விடிய விடிய
மீன் பிடித்து...
விலைப்பேசி
விற்பதற்குள்
நாறிப் போகிறது
மீன் மட்டுமல்ல
மீனவர்
வாழ்க்கையும் தான்...


சகோதரா... வாழ்ந்துக்காட்டு..
கடலலை எப்போதும்
உம் பெயர் சொல்லும்...

ஆவுடை யூனுஸ்

0 comments:

Post a Comment