சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Saturday, 7 March 2020

ஒற்றுமை


அட்டைக்குள் சேரும் தாள்களே
புத்தகமாகிறது!

முட்டைக்குள் மிளிரும் கருக்களே
உயிராகிறது!

பூமிக்குள் விதைக்கும் விதைகளே
வீரியமாகிறது!

தோப்புக்குள் வளரும் மரங்களே
சோலையாகிறது!

கட்டுக்குள் அடங்கும் குச்சிகளே
துடைப்பமாகிறது!

Image may contain: one or more people and close-up


















நாருக்குள் பிணையும் பூக்களே
பூமாலையாகிறது!

நட்புக்குள் இணையும் கைகளே
வலிமையாகிறது!

கைக்குள் அடங்கும் விரல்களே
நம்பிக்(கை)யாகிறது!

ஆவுடை யூனுஸ்

0 comments:

Post a Comment