இந்தியா பாகிஸ்தான்
பிரினைக்கு இருத்தரப்பிலும் தவறுகள் நிகழ்ந்துள்ளன. இந்த பிரிவினைக்கு ஜின்னா மட்டுமே
காரணம் என்று பொதுவாக கூறுகிறார்கள். உண்மை ஜின்னா மட்டும் காரணமில்லை!
மௌலானா அபுல்கலாம்
ஆசாத், M.A அன்ஸாரி,
கான் அப்துல்
கஃபார்கான், ஹக்கீம்
அஜ்மல்கான் போன்றவர்கள் பிரிவினையை எதிர்த்த முக்கியமானவர்கள்.
எல்லா முஸ்லிம்களும் பிரிவினையை ஆதரிக்கவுமில்லை. எல்லா இந்துக்களும்
பிரிவினையை எதிர்க்கவுமில்லை.
ஒரு குறிப்பிட்ட
சமுதாய மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படும்போது அங்கெல்லாம் பிரிவினைக்கான கோசம் எழுந்துள்ளன.
அதுதான் வரலாறு!
இலங்கையில் வாழும்
தமிழர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டதால்,
இலங்கை தமிழருக்கான தனிநாடு கோசம் எழுத்தது.
இலங்கை தமிழருக்கான தனிநாடு கோசம் எழுத்தது.
ஆங்கிலேயர்கள்
இருக்கும் போதே உரிமைகள் மறுக்கப்படுகிறதே, பின்னாளில் என்னவாகுமோ என்ற அச்சம் முஸ்லிம்
மக்களிடையே பற்றிக்கொண்டன. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கிய காரணம்
முஸ்லீம் மக்களுக்கான உரிமைகள் அப்போது மறுக்கப்பட்டன.
ஜின்னா அவர்கள்
முரண்பாடுகளின் ஒட்டுமொத்த கலவை. இஸ்லாம் என்கிற மதத்தின் பெயரால்
ஒரு நாட்டை கட்டமைத்த அவர் மதப்பற்றாளர் எல்லாம் கிடையாது. மது
அருந்துவார், உருது
ஒழுங்காக பேச வராது உண்மையில் அவர் ஒரு குஜராத்தி! காந்தி படித்த அதே
சட்டக்கல்லூரியில்தான் அவரும் படித்தார். பன்றிக்கறியும்
சாப்பிடுவார் என்பார்கள்; ''தொழுகை எல்லாம்
பெரும்பாலும் செய்யவே மாட்டார்.“குரானில்
ஜின்னாவை விட எனக்கு அதிகமான வாசகங்கள் தெரியும் !” என்று காந்தி சொல்கிற அளவுக்குதான்
மதத்தின் மீது
அவருக்கு பற்று இருந்தது.
'இந்து
முஸ்லிம்களுக்கிடையேயான ஒரு தூதுவர்" என்று ஜின்னாவைக்
குறித்து கோபால கிருஷ்ண கோகுலே குறிப்பிடுவார். அவர் இந்து முஸ்லீம் ஒற்றுமையை
விரும்பியவர். ஜின்னா தொடக்கத்தில் பிரிவினையை விரும்பவில்லை. 1928 ஆம் ஆண்டு நேரு கமிட்டி ரிப்போர்ட்
என்று கொண்டு
வரப்பட்டது. அந்த அறிக்கையில் ஜின்னா அவர்கள் 14 திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை
வைத்தார். இந்து மகா சபையின் தலைவராக இருந்த எம்.ஆர். ஜெயகர் ஒரு சொற்றொடர்
கூட மாற்றப்பட மாட்டாது என்று கூறிவிட்டார். அங்கிருந்துதான்
பிரிவினைக்கான அழுத்தம் எழுந்தது என்று கூறலாம்.
இந்தியாவின் அட்டர்னி
ஜெனரலாக இருந்த H. M. சீர்வை
"முஸ்லிம்களுடன்
அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள அப்போதைய காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. இதுவே பிரிவினைக்கு
காரணம் என்று partition of india : legend and Reality என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
1909 ஆம் ஆண்டில் லாலா
லஜபதி ராய் "இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு இனத்தவர்கள் இருவரும் எவ்வகையிலும்
ஒத்துப்போக முடியாதவர்கள்." என்ற கருத்தை முன்வைக்கிறார். 1937 ஆம் ஆண்டு சாவர்கர் பிரிவினை வேண்டும்
என்கிறார்.
பிரிவினை குறித்து
அம்பேத்கார் கூறும்போது " சாவர்கரும் ஜின்னாவும் தனி நாட்டைத்தான் விரும்புகிறார்கள்.
இருவருக்கும் உள்ள வேறுபாடு யாதெனில் ஜின்னா அவர்கள் முஸ்லிம்கள் தனியாகப் போக வேண்டும்
என்கிறார். சாவர்கர் அவர்கள் இந்துக்களோ இந்திய நாட்டில் முஸ்லிம்கள்
எங்களுக்குக் கீழே இருக்க வேண்டும் என்கிறார்கள்" என்று வேறுப்படுத்தி
காட்டுகிறார்.
பிரிவினைக்கு
தேசியவாதியாக இருந்த அல்லாமா இக்பால், ஜின்னா போன்றவர்கள் பிற்காலத்தில் ஆதரித்தார்கள்.
இந்த பிரிவினைக்கு
வேகமாக காய்நகர்தியவர்கள் நேரு, பட்டேல்,
வி.பி.மோகன், மவுண்ட் பேட்டன் பிரபு போன்றவர்களே!
இதன் மூலம் நாம்
தெரிந்துக் கொள்ள வேண்டியது இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு அடித்தளம் போட்டது
யார் என்று புலப்படும்.
எந்தவித திட்டமிடலும்
இல்லாமல் அவசரக் கோலத்தில் ஒரு கோடுப்போட்டு இந்தியா என்ற உடல் இரண்டாக பிளக்கப்பட்டபோது
பெரும் இழப்புகளும், வன்முறைகளும் ஏற்பட்டன.
உடலெனும்
இந்தியா
உதிரத்தால்
கோடுப்போட்டு
பிளக்காமல்
இருந்திருந்தால்
மேலும்
வலிமைக் கூடியிருக்கும்!
வல்லரசுக் கனவு
2020 ல் நடந்திருக்கும்!
வேற்றுமையில்
ஒற்றுமை
அதுதான்
நம் இந்தியா!
இந்தியா பாகிஸ்தான்
பிரிக்கும் போது
இதை
மறந்தது ஏனோ?
சண்டையிட்டுக்
கொள்ளவும்,
மக்களை
கொல்லவும்
சதி செய்துவிட்டு
வெள்ளையன்
வெளியேறிவிட்டான்!
சாதியும், மதமும்
அரசியல்வாதி
சதிக்குள்
சிக்கித் தவிக்கிறது!
என் அருமை இந்தியாவே!
நல்லவர்கள் கையில்
எப்போது தவழுவாய்...
தொகுப்பு
ஆவுடை யூனுஸ்
0 comments:
Post a Comment