அற்பமனிதன்
சூரியனும் நிலவும்
எப்போதும் போலவே
தோன்றுகின்றன!
பூக்களும் செடிகளும்
எப்போதும் போலவே
புன்னகை செய்கின்றன!
மழையும் அருவியும்
எப்போதும் போலவே
தரையில் கொட்டுகின்றன!
மீனும் மானும்
எப்போதும் போலவே
துள்ளிக் குதிக்கின்றன!
முயலும் ஆமையும்
எப்போதும் போலவே
பந்தயத்தில் ஓடுகின்றன!
நாயும் நரியும்
எப்போதும் போலவே
உலா வருகின்றன!
சிங்கமும் புலியும்
எப்போதும் போலவே
வேட்டை ஆடுகின்றன!
யானையும் குதிரை
எப்போதும் போலவே
காட்டுக்குள் நடக்கின்றன!
எறும்பும் புழுவும்
எப்போதும் போலவே
இரைத் தேடுகின்றன!
அற்ப மனிதன் மட்டுமே!
தொற்றுக் கிருமியிடம்
தோற்றுப் போய்
அடைந்து கிடக்கின்றான்!

இந்த உலகில்
நீ ஒன்றுமே இல்லை
என்பதை உணர்த்தத்தான்
இந்த தொற்றுக் கிருமி!
கர்வம் உடைந்து
கண்ணீர் மல்க
உணர்ந்து கொள்
மனிதா!
நீ ஒரு அற்பம்!
-ஆவுடை யூனுஸ்
சூரியனும் நிலவும்
எப்போதும் போலவே
தோன்றுகின்றன!
பூக்களும் செடிகளும்
எப்போதும் போலவே
புன்னகை செய்கின்றன!
மழையும் அருவியும்
எப்போதும் போலவே
தரையில் கொட்டுகின்றன!
மீனும் மானும்
எப்போதும் போலவே
துள்ளிக் குதிக்கின்றன!
முயலும் ஆமையும்
எப்போதும் போலவே
பந்தயத்தில் ஓடுகின்றன!
நாயும் நரியும்
எப்போதும் போலவே
உலா வருகின்றன!
சிங்கமும் புலியும்
எப்போதும் போலவே
வேட்டை ஆடுகின்றன!
யானையும் குதிரை
எப்போதும் போலவே
காட்டுக்குள் நடக்கின்றன!
எறும்பும் புழுவும்
எப்போதும் போலவே
இரைத் தேடுகின்றன!
அற்ப மனிதன் மட்டுமே!
தொற்றுக் கிருமியிடம்
தோற்றுப் போய்
அடைந்து கிடக்கின்றான்!

இந்த உலகில்
நீ ஒன்றுமே இல்லை
என்பதை உணர்த்தத்தான்
இந்த தொற்றுக் கிருமி!
கர்வம் உடைந்து
கண்ணீர் மல்க
உணர்ந்து கொள்
மனிதா!
நீ ஒரு அற்பம்!
-ஆவுடை யூனுஸ்
0 comments:
Post a Comment