#ஜெய் #ஹிந்த் என்றால் பொருள் என்ன?
இந்திய விடுதலை இயக்க காலத்தில், அடிமைப்பட்ட கால இந்திய மக்களின் மனதில்
நாட்டுப்பற்றை விதைக்கவும், விடுதலை வேட்கையை தூண்டவும், பொது
மேடைகளிலும், செய்தித் தொடர்புகளிலும், "ஜெய் ஹிந்த்" ( Jai Hind) என்ற
இந்தியாவின் வெற்றிக்கான வீர முழக்கச் சொல் பயன்படுத்தப்பட்டது.
#இந்தியா #நீடுழி வாழ்க என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவுக்கு வெற்றி (Jai Hindustan Ki) என்பதன் சுருக்கமே ஜெய் ஹிந்த் எனும் சொல்லாகும்.
சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்தியத் தேசிய இராணுவத்தின் மேஜராக இருந்த
ஆந்திரா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜெயின் - உல் அபிதீன் ஹசன்
(Zain-ul Abideen Hasan) என்பவரால் முதன் முதலில் ஜெய்ஹிந்த் எனும் வார்த்தை முழக்கமிடப்பட்டது.
(Zain-ul Abideen Hasan, Hyderabadi who gave ‘Jai Hind’ slogan)
ஜெய்ஹிந்த்!
0 comments:
Post a Comment