சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Saturday, 20 August 2016

முகநூலின் குரல்

கைப்பேசி
விசையை மட்டும் அழுத்தினால்
விஷயம் முடியாது தம்பி!

உன் விசைக் கொண்டு
செயல் முடிக்கனும் அண்ணே!


வசைப்பாடி - எட்டு
திசையெல்லாம்
பொய் தகவலை
பரப்பாதே தம்பி!

திசைத் தேடி
நல்லூக்கம் கொடுக்கும்
நூலைப் படி அண்ணே!

தசையை ஏற்றி
மீசையை முறுக்கி
முழு பயனில்லை தம்பி!

இசைவாக பேசி
இளமை துடிப்புடன்
இமயம் தாண்டி
வெற்றி நடைபோடு அண்னே!!

-✍ஆவுடை யூனுஸ்-

0 comments:

Post a Comment