சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Monday, 20 April 2020

கண் கண்ணாடியகத்தின் நிலை

இமை_மூடிய_கண்கள்_போல கண்_கண்ணாடியகம்!

புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதி ஊரிலிருந்து (ஆவுடையார்பட்டிணம், அம்மாபட்டிணம், கோட்டைப்பட்டிணம், கட்டுமாவடி etc) தமிழ்நாடு முழுக்க பரவலாக மளிகை கடை, கண் கண்ணாடியகம், சூப்பர் மார்க்கெட் போன்ற தொழில்கள் அதிகமாக செய்து வருகிறார்கள்.

பலத் தலைமுறைகளாக மளிகை கடையும், இரண்டு மூன்று தலைமுறையாக ஒரு சில குடும்பங்கள் கண் கண்ணாடியகம் தொழிலை சேவையாக செய்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக பெரும்பான்மையான மக்கள் கண் கண்ணாடியகம் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படு்பவைகள் மளிகைக் கடை போல அதிக நேரம் அழுக்கு உடையுடன் உழைக்க வேண்டியதில்லை, கூட்ட நெரிசல் இல்லாமல் வியாபாரம் செய்யலாம், சமுதாயத்தில் அங்கீகாரம், லாபம், சேவை, மருத்துவம் சார்ந்த பணி போன்றவைகள் அடங்கும்.
கண் கண்ணாடியகம் தொழில் செய்தால் அதிகமாக கஷ்டப்பட வேண்டியதில்லை என்று தவறாக பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள். எல்லாத் தொழிலிலும் கஷ்டங்கள், லாப நட்டம் இருக்கின்றன. இவைகள் இந்த தொழிலுக்கும் பொருந்தும். இந்த தொழிலில் பல இடர்பாடுகள் இருக்கின்றன.

அவைகள்:
1.ஆர்டர் எடுத்து குறிப்பிட்ட நாளில் டெலிவரி செய்ய வேண்டுமென்ற காரணத்தால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

2. லென்ஸ் பவர் சரியான முறையில் பொறுத்தவில்லையென்றால் சில நேரங்களில் அதிக விலையுள்ள லென்ஸ் பயனற்றதாக ஆகிவிடும்.

3.முப்பார்வை லென்ஸ் (Progressive lens) பொருத்தும் போது PD marker, Frame size, Lens centre எல்லாம் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கண்ணாடி அணிந்து ஏதாவது ஒரு பொருளை பார்க்கும் போது பார்வை தெளிவாக தெரியாது. இதை சின்னச் சின்ன adjustment மூலமாக அல்லது வேறொரு புதிய லென்சை பிரேமில் பொருத்தி குறைப்பாட்டை சரி செய்ய வேண்டும்.

4. ஒரு நாளைக்கு 5 முதல் 15 நபர்கள்தான் கடைக்கு வருவார்கள். சில நேரங்களில் ஒன்றிரண்டு நபர்கள் அல்லது அதுகூட வராமல் இருக்கவும் வாய்ப்பு அதிகம். இது போன்ற நாட்களில் பணப் பிரச்சனை பிரதானமாக இருக்கும்.

5. AC, Grinding Machine, Auto Refraction, Slit Lamp ,Software போன்றவைகளுக்கு Anual Maintenance செலவு செய்தே ஆகவேண்டும்.

6. கூடுதல் மின்சாரச் செலவு.

7. அதிமான online கண் கண்ணாடி கடைகள் பெருகிவிட்டதால் போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை.

8. ஓரிரு நாளில் மளிகைக்கடை போல ஒரு பெரியத் தொகையை உடனே புரட்ட முடியாது.

இது போன்று சில சாதகங்களும் பாதகங்களும் இந்த சேவை தொழிலில் இருக்கின்றன.

இப்போது COVID-19 வைரஸ் காரணமான நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் மற்றத்தொழிலை போல கண்ணாடி கடை தொழிலும் வெகுவாக பாதித்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் இக்கடை திறக்க அனுமதி கொடுத்தாலும் வாடிக்கையாளர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் யாரும் கடைக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்கள் தேர்தெடுக்கும் பிரேமுக்கு லென்ஸ் பொறுத்த வேண்டும். கையில் இருக்கும stock லென்சாக இருந்தால் அவற்றை பொருத்திக் கொடுக்கலாம். அவர்களுக்கு தேவையான லென்ஸ் RX வகையை சார்ந்தாக இருந்தால் லென்ஸ் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆர்டர் செய்து வாங்க வேண்டும். ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் எல்லா லென்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பூட்டியே இருக்கின்றன. ஆகையால் கடைத்திறந்தாலும் லென்ஸ் வாங்க முடியாத சூழ்நிலை கடைகாரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நான் பிறந்த ஊர் ஆவுடையார்பட்டிணத்தில் 80% மக்கள் கண் கண்ணாடி கடைதான் வைத்துள்ளார்கள். இப்போது அனைவரும் தாங்கள் தொழில் செய்த ஊரிலுள்ள கடைகளை மூடிவிட்டு பெரும்பான்மை மக்கள் தற்போது சொந்த ஊரில்தான் இருக்கிறார்கள்.

எப்போது ஊரடங்கு முடிவுக்கு வரும்! எப்போது கடைகளை திறப்பது என்று வீட்டுக்குள்ளேயே அடங்கிபோயுள்ளார்கள்.

கையில் சொற்பக் காசுடன் இறைவன் மீது நம்பிக்கை வைத்து மன தைரியத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இது போல் எல்லா ஊரிலும்...
இதே நிலைதான்!

#ஆவுடையூனுஸ்

0 comments:

Post a Comment