Zoom_குறுஞ்செயலி
கொரோனா தாக்கத்தின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டிய
சூழ்நிலையின் காரணமாக, அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவைகளில் ஒன்றாக
‘ஜூம்’ குறுஞ்செயலி அமைந்துள்ளது. வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள
வழி செய்யும் ‘ஜூம்’ குறுஞ்செயலி, பாடம் நடத்துவது முதல் நண்பர்களுடன்
அரட்டை அடிப்பது வரை பலவற்றுக்கு பயன்படுகிறது. இதனால்‘ஜூம்’ குறுஞ்செயலி
மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.சில அரசியல்வாதிகள் கூட தங்களது
பொறுப்பாளர்களிடம் கலந்துரையாடல் செய்வதற்கு இந்த குறுஞ்செயலியை
பயன்படுத்துகிறார்கள்.
இதற்கிடையே ஜூம் செயலியின் பாதுகாப்பு
குறைபாடுகள் தொடர்பான புகார்களும் எழுந்துள்ளன. ‘ஜூம் பாமிங்’ எனப்படும்
பிரச்சினை தவிர, தரவுகள் சேகரிப்பு குறியாக்கம் (Encryption) பிரச்சினை
உள்ளிட்ட புகார்களும் எழுந்துள்ளன. ‘ஜூம்’ பயன்பாடு தொடர்பாக பல்வேறு
எச்சரிக்கைகளும் செய்யப்படுகின்றன.தொடரும் புகார்களால் பயனாளிகள் மத்தியில்
குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ‘ஜூம்’ குறுஞ்செயலி மற்றும் அது
தொடர்புடைய குற்றச் சாட்டுகள் குறித்து அடிப்படையான விஷயங்களை தெரிந்து
கொள்வது பயனுள்ளதாக இருக்கும்:
‘ஜூம்’ (Zoom) குறுஞ்செயலி என்ன செய்கிறது?
‘ஜூம்’ குறுஞ்செயலி வீடியோ சந்திப்பு களுக்கு வழி செய்யும் சேவை. இதன்
மூலம், இணையத்தில் வீடியோ உரையாடல்களை மேற்கொள்ளலாம். இணையதளத்தை
குறுஞ்செயலி வடிவில் பயன்படுத்தலாம்.
‘ஜூம்’ சேவை அறிமுகமானது எப்படி?
‘ஜூம்’ பல ஆண்டுகளாக இருக் கிறது. ‘எரிக் யுவான்’ எனும் சீன அமெரிக்கர்
2011-ம் ஆண்டில், ஜூம் சேவையை தொடங்கினார். இச்செயலி, 2013-ம் ஆண்டு முதல்
வீடியோ சந்திப்பு சேவையை வழங்கி வருகிறது. ஏற்கெனவே தொழில்முறை பயனாளிகள்
மத் தியில் பிரபலமாக இருந்தது. கரோனா சூழலில் வீடியோ சந்திப்பு வசதியை
நாடுபவர்கள் மத்தியிலும் தற்போது பிரபலமாகி வருகிறது.
‘ஜூம்’ குறுஞ்செயலி திடீரென பிரபலமானது ஏன்?
இணையத்தில் வீடியோ சந்திப்பு வசதியை வழங்கும் சேவைகள் பல இருக்கின்றன.
இந்தச் சேவை களில் ஜூம் குறுஞ்செயலி மட்டும் தனித்து நின்று பிரபலமானதற்கு,
இதன் எளிமையே முக்கிய காரணம். அதாவது ஜூம் குறுஞ்செயலி பயனாளி களுக்கு
மிகவும் நட்பானதாக அமைந்துள்ளது. எனவே, யார் வேண்டுமானாலும் இதைஎளிதாக
பயன்படுத்த முடிகிறது. இதன் காரணமாகவே, ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்பு
நடத்த ஜூம் குறுஞ்செயலியை நாடுகின்றனர். நாடகக் கலைஞர்கள் ஜூம் செயலி மூலம்
நாடகம் நடத்துகின்றனர். எழுத்தாளர்கள் ரசிகர்களை சந்திக் கின்றனர்.
நண்பர்கள் பரஸ்பரம் ஆன்லைனில் சந்திக்கின்றனர்.
ஜூமில் இப்போது என்ன பிரச்சினை?
‘ஜூம்’ குறுஞ்செயலி பரவலாக பயன் படுத்தப்படும் நிலையில், அதன் பல்வேறு
அம்சங்களும் உற்று கவனிக்கப்படுகின்றன. இதில்பல்வேறு பாதுகாப்பு
குறைபாடுகளும் தெரியவந்துள்ளன. இவற்றில், ‘ஜூம் பாமிங்’ என்பதும் ஒன்று.
அதென்ன ஜூம் பாமிங்?
ஜூம் வீடியோ சந்திப்புகளில், அழைக்கப்படாத அந்நிய நபர்கள் அத்துமீறி உள்ளே
நுழைந்து அநாகரிகமாக நடந்து கொள்வதையும், தாக்குதலில் ஈடுபடு வதையும்
‘ஜூம் பாமிங்’ என்கின்றனர். ஜூம் செயலியின் பக்கவிளைவு என இதைச் சொல்லலாம்.
இதன் காரணமாக, ‘ஜூம்’ சேவையை பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கை
செய்யப்படுகின்றனர்.
ஜூம் குறுஞ்செயலியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
ஜூம்’ பாமிங் மட்டும் அல்ல, ஜூமில் உள்ள பிரச்சினை. தனியுரிமை (Privacy)
சார்ந்த கவலை களும் எழுந்துள்ளன. நிறுவனத் தின் சீன தொடர்பும் கேள்விகளை
எழுப்புகின்றன. மேலும், பயனாளிகள் தகவல்களை முகநூலில் பகிர்ந்து
கொள்வதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த சேவையின் குறியாக்கம்
(Encryption) குறித்தும் சந்தேகங்கள் இருக்கின்றன. எனவே, ஜூம் பயன்பாட்டில்
கவனம் தேவை என்று சொல்லப்படுகிறது.
இந்த சர்ச்சைகளுக்கு ஜூம் நிறுவனம் அளிக்கும் பதில் என்ன?
‘ஜூம்’ சேவை தொடர்பான கேள்விகளையும், சர்ச்சைகளையும் நிறுவனம் அலட்சியம்
செய்யாமல், அவற்றை சரிசெய்வதில் உரிய கவனம் செலுத்தி வரு கிறது. ‘ஜூம்’
நிறுவனர், எரிக்யுவான், ‘ஜூம்’ தொடர்பான பிரச்சி னைகளை வெளிப்படையாக
ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாகவும் கூறியிருக் கிறார். ஜூம் பாமிங் பிரச்சினை யைப் பொறுத்தவரை,
ஸ்கிரின் ஷேரிங்கை (Screen Sharing) கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல வழிகளை
நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 90 நாட்களுக்கு புதிய அம்சங்கள் அறிமுகத்தை நிறுத்தி வைத்து பிரைவசி விஷயங்களில் கவனம்செலுத்தி வருகிறது.
பயனாளிகள் என்ன செய்ய வேண்டும்?
ஜூம் குறுஞ்செயலி தொடர்பான குற்றச் சாட்டுகள், இணைய சேவைகளில்உள்ள
தனியுரிமை (Privacy) கவலையை வெளிப்படுத்தியுள்ளன. எந்த ஓர் இணைய
சேவையிலும், தனியுரிமை பாதுகாப்பு ஆதார அம்சமாக இடம்பெற்றிருக்க வேண்டும்
எனும் கோரிக்கையை இது வலுப்படுத்துகிறது. பயனாளிகள் தரப்பில், அவர்கள்
பயன்படுத்தும் சேவையின் தன்மை குறித்த விழிப்புணர்வு மேலும் தேவை
என்பதையும் உணர்த்துகிறது.
0 comments:
Post a Comment