கோவணத்திற்கே!
ஆடையில்லா
மனிதனாக வாழும்
ஜீவன்கள் கவலையாக கீழே !
வீதிக்கோர்!
ஆடை அணிவகுப்பு
அலங்கார வண்ணங்களில்
கொடிக்கம்பம் பறக்கிறது -
பாரேன், நகைப்புடன் மேலே!
நட்டிய செடிகள் அனைத்தும்
வெட்டுவதற்கே என்ற
கொள்கைவாதிகளே!
வெட்டிய மரத்தின் அருகிலே!
நட்டப்படும் செடியைப் பார்!
மீண்டும் வெட்டுவதற்கோ!!
நாட்டிய நிகழ்ச்சியுடன்
அரசியல்வாதியின் முன்னிலையில்
நட்டிய கொடிக்கம்பம்-
தேர்தலுக்காக, வண்ணம் பூசி
புத்தாடை அணிந்து பறக்கிறது-
வெட்டப்படாமலே!!!
0 comments:
Post a Comment