மது_வெறியர்கள் (பிரியர்கள்)
மனித மூளையில் தடை செய்யும் மையம் (Inhibitory Centre) என்ற ஒரு பகுதி உள்ளது. மனிதன் தான் தவறு என்று எண்ணும் செயல்களை செய்யவிடாமல் தடுக்கும் பணியை இந்த மையம் செய்கிறது.
மது அருந்திவிட்டால் மேற்கூறிய மையம் தடை (brake) இல்லாத வாகனம் போல கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட ஆரம்பிக்கும். அதனால் பல குற்றங்கள் நாளும் அரங்கேறும்.
மதுபானங்களை அருந்துவதால் உண்டாகும் நோய்கள். சில
1. ஈரலரிப்பு நோய்.
2. மனித உடலின் இரப்பை, தலை, கழுத்து மற்றும் ஈரல் போன்ற இடங்களில் புற்றுநோய்.
3. இரப்பை அழற்சி போன்ற குடல் சம்பந்தமான நோய்கள்.
4. இரத்த அழுத்தநோய், மார்பு வலி.
5. வாதம், கைகால் முடக்கம், வலிப்பு.
6. நரம்பு மண்டலம் பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி.
7. மூளைக் கோளாறு நோய்.
8. தோல் வெடித்தல்.
9. கை–கால் பதற்றம், உடல் நடுக்கம்.
10. இரத்த நாளங்கள் மற்றும் சுரப்பிகளை செயலிழத்தல்.
11. மஞ்சள் காமாலை.
12. கருத்தரித்திருக்கும் பெண் மதுபானங்கள் அருந்துவதால் நன்றாக வளர்ந்த கரு கூட பாதிக்கப்படுகிறது.
இது போன்ற உடல்ரீதியான நோய்கள் மது மனிதனை தாக்குவது மட்டுமல்லாமல் மனரீதியாகவும் மது மனிதனை வாட்டுகிறது. அதாவது
தாழ்வு மனப்பான்மை, குடும்பத்தில் சண்டை, இவர்களை கண்டால் குழந்தைகளின் மனதில் அச்சம், குடும்பத்தில் பொருளாதார பிரச்சனை, குடும்பத்தின் மீது அக்கரையின்மை போன்ற இன்னல்களை தினமும் குடித்தவர்கள் மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்த குடும்பங்களும் சந்திக்க நேரிடும்.
இந்து மதத்தில் மதுவை நேரிடையாக தடுக்கவில்லை. இருப்பினும் மது குடிப்பதினால் தீங்கு விளையும் என கூறப்படுகிறது.
கிறிஸ்துவத்தில் மது அருந்துவது சிறந்தது அல்ல என கூறப்படுகிறது.மனம்போல் மதுவைக் குடிப்பதால் வரும் பாதிப்புகளைக் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
“திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.”
(நீதிமொழிகள் 20:1)
என்றும்
‘துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாதீர்கள்’ என எபேசியர் 5:18 புத்திமதி சொல்கிறது.
இஸ்லாத்தின் பார்வையில் மது முற்றிலும் தடுக்கப்பட்ட விஷப்பானம். மதுபானங்கள் அருந்துபவர்கள் மாத்திரம் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அல்ல. மதுபானங்கள்அருந்துவதில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவர்கள் அனைவரும் இறைவனால் சபிக்கப்பட்டவர்களே.
1. மதுபானம் தயாரிப்பவன்
2. யாருக்காக மதுபானம் தயாரிக்கப்பட்டதோ, அவன்
3. மதுபானங்களை குடிப்பவன்
4. மதுபானங்களை விற்பனை கேந்திரங்களுக்கு கொண்டு செல்பவன்
5. யாருக்காக மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டதோ, அவன்
6. மதுபானங்களை பரிமாறுபவன்
7. மதுபானங்களை விற்பவன்,
8. மதுபானங்கள் விற்று வரும் பணத்தை பயன்படுத்துபவன்,
9. மதுபானங்களை வாங்குபவன்,
10. மதுபானங்கள் யாருக்காக வாங்கப்பட்டதோ, அவன்
ஆகிய பத்து சாரார் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குகிறது.
(அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நபித்தோழர் அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கும் செய்தி)
மதுபானத்தை தீய பழக்கமாக பார்ப்பதற்கு மதமும், மருத்துவமும், சமுதாய காரணங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது.
குடிக்காமல் சிந்தித்து பாருங்கள்
குடி குடியை கெடுக்கும்!
ஏனென்றால்
குடித்துவிட்டு உங்களால்
கட்டுப்பாட்டுடன் சிந்திக்க முடியாது.
தொகுப்பு
ஆவுடை யூனுஸ்
0 comments:
Post a Comment