சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Monday, 20 April 2020

கொரோனா தொற்றுக்காலத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சுவது கட்டாயமா?

நோன்பு கஞ்சி

தற்போது இந்தியாவில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. மேலும் இவ்வுத்தரவு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தகாலச் சூழ்நிலையில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கக்கூடாது என்ற அரசின் உத்தரவை ஏற்று பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறுவதில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.

ரமலான் மாதமுழுவதும் பள்ளிவாசல்களில் நோன்புகஞ்சி காய்ச்சி இஸ்லாமியருக்கும் இந்து, கிறித்துவ சகோதரர்களுக்கும் மாலை நேரங்களில் வழங்குவது வழக்கம். இதன் மூலம் சகோதரத்துவமும் நட்பும் வளர்கிறது. இன்ஷா அல்லாஹ், இந்த வருடம் 2020 ஏப்ரல் மாதம் கடைசி வாரத்திலிருந்து நோன்பு தொடங்க உள்ளதால் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு கொடுத்தால், அவர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியில் நின்று வாங்கினாலும் கொரோனா கிறுமி நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன். 



ஆகவே இந்த இக்கட்டாண காலத்தில் அந்தெந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் இரண்டு முடிவுகளை எடுக்கலாம்.

முதலாவது, அரசிடம் முறையான அனுமதி பெற்று ஏதாவது ஒரு இடத்தில் இரண்டு அல்லது மூன்று நபர்களை வைத்து நோன்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வீடு வீடாக (Door Delivery) சென்று கொடுக்கலாம்.

இரண்டாவது, இந்த தடை உத்தரவு காலத்தில் நோன்பு கஞ்சியை பொதுவான இடத்தில் எல்லோருக்கும் காய்ச்சு கொடுக்காமல், வீட்டிலேயே காய்ச்ச பொருளாதாரமுள்ள மக்களுக்கு அறிவுறுத்தலாம். இதில் கஞ்சி கூட காய்ச்ச முடியாத ஏழைகளை (Poor People) அடையாளம் கண்டு அவர்களுக்கு மட்டும் நிர்வாகம்/தன்னார்வலர்கள் பொறுப்பெடுத்து கஞ்சியை வழங்கலாம்.

அல்லது
ஒட்டுமொத்த இஸ்லாமிய கூட்டமைப்பும் அரசிடம் கடித மூலமாக நோன்பு கஞ்சி காய்ச்சுவதுப் பற்றி கோரிக்கை வைக்கலாம். அதில் அரசு காட்டும் வழிமுறைகளை இஸ்லாமியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தொற்று நோய் பரவலை தடுக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இஸ்லாமிய சமுதாயம் ஒத்துழைப்பு வழங்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளது.

கடைசியாக ஒரு விஷயம் நோன்பு கஞ்சி கட்டாயம் இல்லை. அது ஒரு உணவு என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

#ஆவுடையூனுஸ்
14.04.2020

அறிவிப்பு:
தமிழக அரசு பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்ச அனுமதி இல்லை என கூறியுள்ளது.
இந்த பதிவு அரசின் அறிவிப்புக்கு முன்பு பதிவிட்டது. அரசின் அறிவிப்பை ஏற்று ஊரடங்கு காலம் வரை பள்ளிவாசலில் கஞ்சி காய்ச்ச வேண்டாம்.

0 comments:

Post a Comment