சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Tuesday, 30 January 2018

சொந்த மண்


*சொந்த மண்*

சொந்தங்களை பார்க்க,
சோகங்களை மறக்க,
சகோதரத்தை வளர்க்க,
சகதியில் விளையாட
இன்னும் ஏராளம்...
பண்டிகை காலமாவது
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

பழைய
காலத்திற்கு செல்வோம்!
பாதம் பதித்த
பாதைகளை பார்ப்போம்!
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

தொழில் செய்யும்
இடத்திலிருந்து,
பயணம் செய்து
தொழுத பள்ளியை
தொட்டுப் பார்க்க
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

சோகம் மறந்து
திட்டங்கள் தீட்டும்
சோம்பேறி மடம்
அதில் நீ பதித்த
தடத்தைக் காண
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

தொலைந்த
கனவுகளை மீட்டெடுக்க
தொலைதூர
பயணம் செய்தாலும்
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

உன் முகங்காண
தழைத்து நிற்கும்
செடிகளுக்கு
தண்ணீர் ஊற்ற
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

தூர்வாரிய
மங்கேணி குளத்தை
துள்ளிக் குதித்துப் பார்க்க
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!


மறந்துபோன
சிறுவயது விளையாட்டை
உம்மத்துக்கு உணர்த்துவோம்!
உலகிற்கு வெளிப்படுத்துவோம்!
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

கார்ட்டூன்
சித்திரத்தை மறந்து,
கைபேசி
விளையாட்டை துறந்து,
கடற்கரை மைதானத்தில்
கலகலப்பாக விளையாடலாம்.
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

✍*ஆவுடை யூனுஸ்*



0 comments:

Post a Comment