சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Foreign Visit-Mauritius

At the time of taking class in Mauritius - 2014

உண்மையை உரக்கப் பேசு!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

நல்ல கல்வியை நோக்கி!

கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும் - முஹம்மது நபி (ஸல்)

எதிர் நீச்சல்

போராடக் கற்றுக்கொள்!

Monday, 20 April 2020

ஜும் குறுஞ்செயலி

Zoom_குறுஞ்செயலி

கொரோனா தாக்கத்தின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலையின் காரணமாக, அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவைகளில் ஒன்றாக ‘ஜூம்’ குறுஞ்செயலி அமைந்துள்ளது. வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஜூம்’ குறுஞ்செயலி, பாடம் நடத்துவது முதல் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வரை பலவற்றுக்கு பயன்படுகிறது. இதனால்‘ஜூம்’ குறுஞ்செயலி மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.சில அரசியல்வாதிகள் கூட தங்களது பொறுப்பாளர்களிடம் கலந்துரையாடல் செய்வதற்கு இந்த குறுஞ்செயலியை பயன்படுத்துகிறார்கள்.

இதற்கிடையே ஜூம் செயலியின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகார்களும் எழுந்துள்ளன. ‘ஜூம் பாமிங்’ எனப்படும் பிரச்சினை தவிர, தரவுகள் சேகரிப்பு குறியாக்கம் (Encryption) பிரச்சினை உள்ளிட்ட புகார்களும் எழுந்துள்ளன. ‘ஜூம்’ பயன்பாடு தொடர்பாக பல்வேறு எச்சரிக்கைகளும் செய்யப்படுகின்றன.தொடரும் புகார்களால் பயனாளிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ‘ஜூம்’ குறுஞ்செயலி மற்றும் அது தொடர்புடைய குற்றச் சாட்டுகள் குறித்து அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்:


‘ஜூம்’ (Zoom) குறுஞ்செயலி என்ன செய்கிறது?
‘ஜூம்’ குறுஞ்செயலி வீடியோ சந்திப்பு களுக்கு வழி செய்யும் சேவை. இதன் மூலம், இணையத்தில் வீடியோ உரையாடல்களை மேற்கொள்ளலாம். இணையதளத்தை குறுஞ்செயலி வடிவில் பயன்படுத்தலாம்.

‘ஜூம்’ சேவை அறிமுகமானது எப்படி?
‘ஜூம்’ பல ஆண்டுகளாக இருக் கிறது. ‘எரிக் யுவான்’ எனும் சீன அமெரிக்கர் 2011-ம் ஆண்டில், ஜூம் சேவையை தொடங்கினார். இச்செயலி, 2013-ம் ஆண்டு முதல் வீடியோ சந்திப்பு சேவையை வழங்கி வருகிறது. ஏற்கெனவே தொழில்முறை பயனாளிகள் மத் தியில் பிரபலமாக இருந்தது. கரோனா சூழலில் வீடியோ சந்திப்பு வசதியை நாடுபவர்கள் மத்தியிலும் தற்போது பிரபலமாகி வருகிறது.

‘ஜூம்’ குறுஞ்செயலி திடீரென பிரபலமானது ஏன்?
இணையத்தில் வீடியோ சந்திப்பு வசதியை வழங்கும் சேவைகள் பல இருக்கின்றன. இந்தச் சேவை களில் ஜூம் குறுஞ்செயலி மட்டும் தனித்து நின்று பிரபலமானதற்கு, இதன் எளிமையே முக்கிய காரணம். அதாவது ஜூம் குறுஞ்செயலி பயனாளி களுக்கு மிகவும் நட்பானதாக அமைந்துள்ளது. எனவே, யார் வேண்டுமானாலும் இதைஎளிதாக பயன்படுத்த முடிகிறது. இதன் காரணமாகவே, ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்பு நடத்த ஜூம் குறுஞ்செயலியை நாடுகின்றனர். நாடகக் கலைஞர்கள் ஜூம் செயலி மூலம் நாடகம் நடத்துகின்றனர். எழுத்தாளர்கள் ரசிகர்களை சந்திக் கின்றனர். நண்பர்கள் பரஸ்பரம் ஆன்லைனில் சந்திக்கின்றனர்.

ஜூமில் இப்போது என்ன பிரச்சினை?
‘ஜூம்’ குறுஞ்செயலி பரவலாக பயன் படுத்தப்படும் நிலையில், அதன் பல்வேறு அம்சங்களும் உற்று கவனிக்கப்படுகின்றன. இதில்பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகளும் தெரியவந்துள்ளன. இவற்றில், ‘ஜூம் பாமிங்’ என்பதும் ஒன்று.

அதென்ன ஜூம் பாமிங்?
ஜூம் வீடியோ சந்திப்புகளில், அழைக்கப்படாத அந்நிய நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து அநாகரிகமாக நடந்து கொள்வதையும், தாக்குதலில் ஈடுபடு வதையும் ‘ஜூம் பாமிங்’ என்கின்றனர். ஜூம் செயலியின் பக்கவிளைவு என இதைச் சொல்லலாம். இதன் காரணமாக, ‘ஜூம்’ சேவையை பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர்.

ஜூம் குறுஞ்செயலியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
ஜூம்’ பாமிங் மட்டும் அல்ல, ஜூமில் உள்ள பிரச்சினை. தனியுரிமை (Privacy) சார்ந்த கவலை களும் எழுந்துள்ளன. நிறுவனத் தின் சீன தொடர்பும் கேள்விகளை எழுப்புகின்றன. மேலும், பயனாளிகள் தகவல்களை முகநூலில் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த சேவையின் குறியாக்கம் (Encryption) குறித்தும் சந்தேகங்கள் இருக்கின்றன. எனவே, ஜூம் பயன்பாட்டில் கவனம் தேவை என்று சொல்லப்படுகிறது.

இந்த சர்ச்சைகளுக்கு ஜூம் நிறுவனம் அளிக்கும் பதில் என்ன?
‘ஜூம்’ சேவை தொடர்பான கேள்விகளையும், சர்ச்சைகளையும் நிறுவனம் அலட்சியம் செய்யாமல், அவற்றை சரிசெய்வதில் உரிய கவனம் செலுத்தி வரு கிறது. ‘ஜூம்’ நிறுவனர், எரிக்யுவான், ‘ஜூம்’ தொடர்பான பிரச்சி னைகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருக் கிறார். ஜூம் பாமிங் பிரச்சினை யைப் பொறுத்தவரை, ஸ்கிரின் ஷேரிங்கை (Screen Sharing) கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல வழிகளை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 90 நாட்களுக்கு புதிய அம்சங்கள் அறிமுகத்தை நிறுத்தி வைத்து பிரைவசி விஷயங்களில் கவனம்செலுத்தி வருகிறது.

பயனாளிகள் என்ன செய்ய வேண்டும்?
ஜூம் குறுஞ்செயலி தொடர்பான குற்றச் சாட்டுகள், இணைய சேவைகளில்உள்ள தனியுரிமை (Privacy) கவலையை வெளிப்படுத்தியுள்ளன. எந்த ஓர் இணைய சேவையிலும், தனியுரிமை பாதுகாப்பு ஆதார அம்சமாக இடம்பெற்றிருக்க வேண்டும் எனும் கோரிக்கையை இது வலுப்படுத்துகிறது. பயனாளிகள் தரப்பில், அவர்கள் பயன்படுத்தும் சேவையின் தன்மை குறித்த விழிப்புணர்வு மேலும் தேவை என்பதையும் உணர்த்துகிறது.

கொரோனா தொற்றுக்காலத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சுவது கட்டாயமா?

நோன்பு கஞ்சி

தற்போது இந்தியாவில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. மேலும் இவ்வுத்தரவு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தகாலச் சூழ்நிலையில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கக்கூடாது என்ற அரசின் உத்தரவை ஏற்று பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறுவதில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.

ரமலான் மாதமுழுவதும் பள்ளிவாசல்களில் நோன்புகஞ்சி காய்ச்சி இஸ்லாமியருக்கும் இந்து, கிறித்துவ சகோதரர்களுக்கும் மாலை நேரங்களில் வழங்குவது வழக்கம். இதன் மூலம் சகோதரத்துவமும் நட்பும் வளர்கிறது. இன்ஷா அல்லாஹ், இந்த வருடம் 2020 ஏப்ரல் மாதம் கடைசி வாரத்திலிருந்து நோன்பு தொடங்க உள்ளதால் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு கொடுத்தால், அவர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியில் நின்று வாங்கினாலும் கொரோனா கிறுமி நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன். 



ஆகவே இந்த இக்கட்டாண காலத்தில் அந்தெந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் இரண்டு முடிவுகளை எடுக்கலாம்.

முதலாவது, அரசிடம் முறையான அனுமதி பெற்று ஏதாவது ஒரு இடத்தில் இரண்டு அல்லது மூன்று நபர்களை வைத்து நோன்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வீடு வீடாக (Door Delivery) சென்று கொடுக்கலாம்.

இரண்டாவது, இந்த தடை உத்தரவு காலத்தில் நோன்பு கஞ்சியை பொதுவான இடத்தில் எல்லோருக்கும் காய்ச்சு கொடுக்காமல், வீட்டிலேயே காய்ச்ச பொருளாதாரமுள்ள மக்களுக்கு அறிவுறுத்தலாம். இதில் கஞ்சி கூட காய்ச்ச முடியாத ஏழைகளை (Poor People) அடையாளம் கண்டு அவர்களுக்கு மட்டும் நிர்வாகம்/தன்னார்வலர்கள் பொறுப்பெடுத்து கஞ்சியை வழங்கலாம்.

அல்லது
ஒட்டுமொத்த இஸ்லாமிய கூட்டமைப்பும் அரசிடம் கடித மூலமாக நோன்பு கஞ்சி காய்ச்சுவதுப் பற்றி கோரிக்கை வைக்கலாம். அதில் அரசு காட்டும் வழிமுறைகளை இஸ்லாமியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தொற்று நோய் பரவலை தடுக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இஸ்லாமிய சமுதாயம் ஒத்துழைப்பு வழங்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளது.

கடைசியாக ஒரு விஷயம் நோன்பு கஞ்சி கட்டாயம் இல்லை. அது ஒரு உணவு என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

#ஆவுடையூனுஸ்
14.04.2020

அறிவிப்பு:
தமிழக அரசு பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்ச அனுமதி இல்லை என கூறியுள்ளது.
இந்த பதிவு அரசின் அறிவிப்புக்கு முன்பு பதிவிட்டது. அரசின் அறிவிப்பை ஏற்று ஊரடங்கு காலம் வரை பள்ளிவாசலில் கஞ்சி காய்ச்ச வேண்டாம்.

கண் கண்ணாடியகத்தின் நிலை

இமை_மூடிய_கண்கள்_போல கண்_கண்ணாடியகம்!

புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதி ஊரிலிருந்து (ஆவுடையார்பட்டிணம், அம்மாபட்டிணம், கோட்டைப்பட்டிணம், கட்டுமாவடி etc) தமிழ்நாடு முழுக்க பரவலாக மளிகை கடை, கண் கண்ணாடியகம், சூப்பர் மார்க்கெட் போன்ற தொழில்கள் அதிகமாக செய்து வருகிறார்கள்.

பலத் தலைமுறைகளாக மளிகை கடையும், இரண்டு மூன்று தலைமுறையாக ஒரு சில குடும்பங்கள் கண் கண்ணாடியகம் தொழிலை சேவையாக செய்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக பெரும்பான்மையான மக்கள் கண் கண்ணாடியகம் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படு்பவைகள் மளிகைக் கடை போல அதிக நேரம் அழுக்கு உடையுடன் உழைக்க வேண்டியதில்லை, கூட்ட நெரிசல் இல்லாமல் வியாபாரம் செய்யலாம், சமுதாயத்தில் அங்கீகாரம், லாபம், சேவை, மருத்துவம் சார்ந்த பணி போன்றவைகள் அடங்கும்.
கண் கண்ணாடியகம் தொழில் செய்தால் அதிகமாக கஷ்டப்பட வேண்டியதில்லை என்று தவறாக பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள். எல்லாத் தொழிலிலும் கஷ்டங்கள், லாப நட்டம் இருக்கின்றன. இவைகள் இந்த தொழிலுக்கும் பொருந்தும். இந்த தொழிலில் பல இடர்பாடுகள் இருக்கின்றன.

அவைகள்:
1.ஆர்டர் எடுத்து குறிப்பிட்ட நாளில் டெலிவரி செய்ய வேண்டுமென்ற காரணத்தால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

2. லென்ஸ் பவர் சரியான முறையில் பொறுத்தவில்லையென்றால் சில நேரங்களில் அதிக விலையுள்ள லென்ஸ் பயனற்றதாக ஆகிவிடும்.

3.முப்பார்வை லென்ஸ் (Progressive lens) பொருத்தும் போது PD marker, Frame size, Lens centre எல்லாம் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கண்ணாடி அணிந்து ஏதாவது ஒரு பொருளை பார்க்கும் போது பார்வை தெளிவாக தெரியாது. இதை சின்னச் சின்ன adjustment மூலமாக அல்லது வேறொரு புதிய லென்சை பிரேமில் பொருத்தி குறைப்பாட்டை சரி செய்ய வேண்டும்.

4. ஒரு நாளைக்கு 5 முதல் 15 நபர்கள்தான் கடைக்கு வருவார்கள். சில நேரங்களில் ஒன்றிரண்டு நபர்கள் அல்லது அதுகூட வராமல் இருக்கவும் வாய்ப்பு அதிகம். இது போன்ற நாட்களில் பணப் பிரச்சனை பிரதானமாக இருக்கும்.

5. AC, Grinding Machine, Auto Refraction, Slit Lamp ,Software போன்றவைகளுக்கு Anual Maintenance செலவு செய்தே ஆகவேண்டும்.

6. கூடுதல் மின்சாரச் செலவு.

7. அதிமான online கண் கண்ணாடி கடைகள் பெருகிவிட்டதால் போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை.

8. ஓரிரு நாளில் மளிகைக்கடை போல ஒரு பெரியத் தொகையை உடனே புரட்ட முடியாது.

இது போன்று சில சாதகங்களும் பாதகங்களும் இந்த சேவை தொழிலில் இருக்கின்றன.

இப்போது COVID-19 வைரஸ் காரணமான நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் மற்றத்தொழிலை போல கண்ணாடி கடை தொழிலும் வெகுவாக பாதித்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் இக்கடை திறக்க அனுமதி கொடுத்தாலும் வாடிக்கையாளர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் யாரும் கடைக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்கள் தேர்தெடுக்கும் பிரேமுக்கு லென்ஸ் பொறுத்த வேண்டும். கையில் இருக்கும stock லென்சாக இருந்தால் அவற்றை பொருத்திக் கொடுக்கலாம். அவர்களுக்கு தேவையான லென்ஸ் RX வகையை சார்ந்தாக இருந்தால் லென்ஸ் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆர்டர் செய்து வாங்க வேண்டும். ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் எல்லா லென்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பூட்டியே இருக்கின்றன. ஆகையால் கடைத்திறந்தாலும் லென்ஸ் வாங்க முடியாத சூழ்நிலை கடைகாரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நான் பிறந்த ஊர் ஆவுடையார்பட்டிணத்தில் 80% மக்கள் கண் கண்ணாடி கடைதான் வைத்துள்ளார்கள். இப்போது அனைவரும் தாங்கள் தொழில் செய்த ஊரிலுள்ள கடைகளை மூடிவிட்டு பெரும்பான்மை மக்கள் தற்போது சொந்த ஊரில்தான் இருக்கிறார்கள்.

எப்போது ஊரடங்கு முடிவுக்கு வரும்! எப்போது கடைகளை திறப்பது என்று வீட்டுக்குள்ளேயே அடங்கிபோயுள்ளார்கள்.

கையில் சொற்பக் காசுடன் இறைவன் மீது நம்பிக்கை வைத்து மன தைரியத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இது போல் எல்லா ஊரிலும்...
இதே நிலைதான்!

#ஆவுடையூனுஸ்