ஆசிரியர் பணி என்பது என்ன? நாம் கற்கும் கல்வி எந்த நிலையில் உள்ளது? கல்விகாக நான் பாடுபடுகிறேன் என்று சிலர் சுய தம்பட்டமடிபப்பது எதற்காக? இவைகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம், பண்பு, பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம், ஆன்மீகம், பொது அறிவு போன்ற அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை நாட்டின் சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட சிறந்த சேவையை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்களாக இருக்க முடியும்.
ஆசிரியப் பணியின் மேன்மையை "நாட்டின் எதிர்காலம், பள்ளி வகுப்பறைகளிலேயே தீட்டப்படுகின்றது" என்று டாக்டர் எஸ்.இராதா கிருஷ்ணன் புகழ்ந்துரைத்துள்ளார். ஆனால், இன்று எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சேவை புரியும் வகையில் பாடம் கற்பிக்கிறார்கள் என்பதை அவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் தன் பெற்றோர்களிடம் அதிக நேரம் செலவழிப்பதை விட ஆசிரியர்களிடம் கலந்துரையாடும் வாய்ப்பினை அதிகம் பெற்றுள்ளனர். அந்த வாய்பை ஆசிரியர்களும் பயன்படுத்தி கொள்ள முன்வரவேண்டும். மாணவர்கள் கேட்கும் எல்லா விதமான கேள்விகளுக்கும் தயக்கமின்றி பதிலளிப்பதோடு, அவர்களை ஊக்கப்படுத்துவதும் ஆசிரியர்களின் தலைச்சிறந்த கடமையாகும்.
இன்று நாம் கற்கும் கல்வியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, சமச்சீர் கல்வி என்ற நிலை உருவானது பாராட்டக்குரியதே! இருப்பினும், அதில் எல்லா மார்க்கத்தில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களை சரிசமமாக கொண்டிருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்தியா பல்வேறு சாதி, மதங்களை உள்ளடைக்கிய நாடு. இந்த நாட்டில் நாம் அனைவரும் சமமே. அப்படி இருக்கையில் கல்வி புத்தகத்தில் மட்டும் சில சமய மார்க்கத்தின் புராணங்களும், கட்டுரைகளும் அதிகமாக இருப்பதைக் காணலாம். எனவே, மற்ற சமயங்களில் உள்ள கட்டுரைகளும் வரலாறுகளும் இடம் பெற்றால் அது ஒரு சிறப்புமிக்க சமச்சீர் கல்வியாக இருக்க முடியும்.
“ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்” என்று பேரறிஞர் அண்ணா கூறிய வார்த்தைக்கு இணங்க முன்னாள், இந்நாள் மாநில அரசுகள் போட்டிபோட்டுக்கொண்டு அதிகமான ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்கி வருகின்றன. இருந்தாலும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறைவான ஊதியம் பெற்றாலும் அரசு பள்ளி ஆசிரியர்களை விட நிறைவான கல்வியைப் போதிக்கின்றன. இந்த நிலை களையப்பட வேண்டிய ஒன்று. ஆர்வமும் ஈடுபாடும்தான் எல்லா செயல்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன. அத்தகைய செயல்கள் மாணவர்களை மேன்படுத்துவதாக அமைந்தால், அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இன்னொரு விஷயத்தை நீங்கள் கவனித்தால் நன்றாக புரியும். அதாவது பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதில்லை. ஆனால், தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களை கூட பெற்றோர்கள் அரசு கல்லூரிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அது ஏனென்று அரசு சிந்திக்க வேண்டிய செயலாகும்!

மதம் சார்ந்த கல்விதான் கற்க வேண்டுமெனில் தனியாக கற்று கொள்ளலாம். உதாரணமாக, இஸ்லாம் சார்ந்த கல்வி கற்க வேண்டுமெனில் அதற்கு மதரஸாக்கள் ஏராளம் உள்ளன. அங்கே ஹதீஸ்களும், குரானும் மற்றும் உலகம் சார்ந்த கல்வியும் போதிக்கப் படுகின்றன. ஆனால் ஒரு சிலர் மட்டும் உலகம் சார்ந்த கல்வி தேவையில்லை மதம் சார்ந்த கல்வி ஒன்றே போதுமானது என்று கூக்குரல் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இம்மைக்கு உலகம் சார்ந்த சமச்சீர் கல்வி அவசியம் தேவைப் படுகிறது. அதை நாம் முற்றிலும் புறம்தள்ள முடியாது. அதிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் உலகம் சார்ந்த கல்வியில் மிகவும் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார்கள். இந்தகைய சூழல் மாற்றப்பட வேண்டும். அதனால்தான் முஸ்லிம் மக்கள் அரசு பணியில் மிக குறைவான மக்களே பணியாற்றுகின்றார்கள். ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் வரவேண்டுமெனில் கல்வி கற்க முன்வர வேண்டும். படிக்காத அல்லது படிப்பை பாதியில் நிறுதியவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி மையங்கள் தொலைதூரக் கல்வியில்(Distance Education) படிப்பதற்கான அறிய வாய்பை வழங்குகிறது. அதே போல குறிப்பாக முஸ்லிம்களுக்கு மறுமைக்கு மதம் சார்ந்த கல்வி அவசியம். அதில் மாற்று கருத்து இல்லை. இக்கல்வியும் தொலைதூரக் கல்வி மூலம் படிக்கும் வாய்பை வழங்க பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும்.
-இப்படிக்கு-
நற்கல்வியை எதிர்ப்பார்க்கும் சமூக ஆர்வர்களில் நானும் ஒருவன் (M.M.யூனுஸ்)
English Summary: In various
countries around the world, Teachers' Day is celebrated on different dates. In this
occasion, we should know about the current education of Tamilnadu and its
issues. What is the role of teachers? What is the current position of education
which we are learning? Why some people saying I am only stand for education. In
this article I raised those questions with valid reasons.
Please share, if you like or comments.
Superb
ReplyDelete