சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Foreign Visit-Mauritius

At the time of taking class in Mauritius - 2014

உண்மையை உரக்கப் பேசு!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

நல்ல கல்வியை நோக்கி!

கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும் - முஹம்மது நபி (ஸல்)

எதிர் நீச்சல்

போராடக் கற்றுக்கொள்!

Tuesday, 29 April 2014

கொடிக்கம்பம்



கோவணத்திற்கே!
ஆடையில்லா
மனிதனாக வாழும்
ஜீவன்கள் கவலையாக கீழே !

வீதிக்கோர்!
ஆடை அணிவகுப்பு
அலங்கார வண்ணங்களில்
கொடிக்கம்பம் பறக்கிறது -
பாரேன், நகைப்புடன் மேலே!

நட்டிய செடிகள் அனைத்தும்
வெட்டுவதற்கே என்ற
கொள்கைவாதிகளே!
வெட்டிய மரத்தின் அருகிலே!
நட்டப்படும் செடியைப் பார்!
மீண்டும் வெட்டுவதற்கோ!!

நாட்டிய நிகழ்ச்சியுடன்
அரசியல்வாதியின் முன்னிலையில்
நட்டிய கொடிக்கம்பம்-
தேர்தலுக்காக, வண்ணம் பூசி
புத்தாடை அணிந்து பறக்கிறது-
வெட்டப்படாமலே!!!

Monday, 7 April 2014

தேர்தல் அறிக்கை

பா.ஜ., கட்சியின் லோக்சபா தேர்தல் அறிக்கை முரண்பாடான வெற்று அறிக்கை:
அதில் உங்கள் பார்வைக்கு சில:
  • "அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம்" - இந்தியா பல மதங்களையும், சாதிகளையும் கொண்ட நாடு ஒரே சிவில் சட்டம் என்பது மத பிரச்சனையை உண்டுபண்ணும்.
  • "கடலேரா பகுதி வளர்ச்சிக்கு சாகர் மாலா திட்டம்"-  சேது சமுத்திர திட்டத்தை எதிர்பதற்கு ஒரு திட்டமா ?
  • "அயோத்தியில் அரசியல் சட்டத்திற்குட்பட்டு ராமர் கோயில் கட்டப்படும்" - எங்கடா இது வரலேயே என்று பார்த்தேன்!!!
  •  "பசுக்கள் காத்திட சிறப்பு திட்டம்" - மற்ற விலங்கு உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா!!!
BJP-ன் பின்னால் RSS இருப்பது மேலும் ஒரு முறை நிருபிக்கப் பட்டுள்ளது.