சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Foreign Visit-Mauritius

At the time of taking class in Mauritius - 2014

உண்மையை உரக்கப் பேசு!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

நல்ல கல்வியை நோக்கி!

கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும் - முஹம்மது நபி (ஸல்)

எதிர் நீச்சல்

போராடக் கற்றுக்கொள்!

Monday, 24 March 2025

ரமலான் மாதக் கவிதை

பாங்கு சொல்லும் நேரமிது

நோன்பு நோர்க்கும் மாதமிது.


தொழுகை செல்லும் வழியிது

தோழமை கூடும் இடமிது.



வேண்டல் குவியும் வேளையிது

சீண்டல் குறையும் சினேகமிது.


நன்மை தேடும் காலமிது

பண்பை வளர்க்கும் மார்க்கமிது.


ஈகை வழங்கும் ஏற்றமிது

ஏக இறைவன் கட்டளையிது.


- #ஆவுடையூனுஸ்

வெளிநாட்டிற்கு புத்தகம் பார்சல் அனுப்ப வேண்டுமா?

 வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்ப போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க... 


#நெஞ்சுக்கு_நீதி, #உங்களில்_ஒருவன் இரண்டு நூல்களை வாங்கி இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு அனுப்ப முடியுமா? கழகத் தோழரின் அழைப்பு! 


நலன் விசாரித்த பிறகு...

...

...

... 


ம்ம்... கட்டாயம் வாங்கி அனுப்புகிறேன் என கூறி வாட்சப் (பகிர்வஞ்சல்) அழைப்பை துண்டித்துக் கொண்டேன். 


மறுநாள் மலேசியா நண்பருக்கு நான் கால் செய்து... 


புத்தகம் இங்கே கிடைக்கவில்லை. சென்னையில் எனக்கு தெரிந்த தமிழ் மற்றும் கணினி ஆர்வம் உள்ள நண்பர் இருக்கிறார். அவரிடம் தொடர்புக் கொண்டு வாங்கி எனக்கு அனுப்ப சொல்லுகிறேன். பிறகு எனக்கு கிடைத்தவுடன் நான் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறினேன். 


ம்ம்ம்... அதற்கான பணத்தை அக்கௌன்டில் ட்ரான்ஸ்பர் செய்கிறேன் என்றார். 


பணம் இருக்கட்டும் முதலில் நீங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி அனுப்புகிறேன்.

மீதி அப்புறம் பேசிக்கொள்வோம்... 


சென்னையில் இருக்கும் எனது நெருங்கிய நண்பர், அவருக்கு தெரிந்த நண்பரிடம் கூறி இரண்டு நூல்களையும் வாங்கி, பாதுகாப்பாக எனக்கு இந்திய பார்சல் சர்விஸில் அனுப்பி வைத்தார். 


புத்தகப் பார்சல் கையில் கிடைத்த உடன் பலநாள் பசியில் இருந்தவன் உணவு பொட்டலத்தை பிரிப்பதைப் போல் பிரித்து ஆர்வமாக சில பக்கங்களை வாசித்தேன்... மனசாட்சி லேசாக குத்தியது.! 


ஓசியில் படிக்க வேண்டாம் காசுக்கொடுத்து பிறகு வாங்கி முழுவதையும் படிப்போம் என பசி தீரும் முன்பே புத்தகத்தை மலேசியா அனுப்ப பார்சல் செய்து,

தனியார் கூரியர் ஆபீஸ்க்கு போனேன். எடை போட்டார்கள் 1.6 kg இருந்தது. இதை 2 kg கணக்கில் எடுத்துக் கொள்வோம். கணிணியில் பார்த்து சுமார் 4000 ரூபாய் வரும் என்றார். இரண்டு புத்தகத்தின் விலை 1000 ரூபாய் , கூரியர் அனுப்ப 4000 ரூபாயா என்று வாயை பிளந்து மூடுவதற்குள், அவரே ஒரு வழியையும் சொன்னார் இந்தியன் போஸ்டல் சர்வீஸில் அனுப்புங்க காசு குறைவாக வரும் என்று... 


அடுத்து பைக்கை செல்ப் ஸ்டார்ட் செய்து போஸ்ட் ஆபீசுக்கு 2.00 மணிக்கு போனேன். சார் பார்சல் அனுப்பும் டைம் முடிந்துவிட்டது. நாளைக்கு வாங்க என்றார் அலுவலர். சரி நாளைக்கு வருகிறேன் இந்த பார்சலுக்கு எவ்வளவு ஆகும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க என்றேன். 



உள்ளே என்ன இருக்கு?

புத்தகம் என்றேன். 


புத்தகம்தான் இருக்கு என்று எப்படி நம்புவது. 


ஏர்போர்ட்டில் ஸ்கேன் செய்து பார்ப்பார்கள் அது போல் ஸ்கேன் செய்து பாருங்க என்றேன். 


அதுலாம் இங்கே இல்லை! 


பார்சலை பிரித்து நாங்க செக் செய்த பிறகு, இங்கேதான் அதை நீங்க மீண்டும் பார்சல் செய்ய வேண்டும் என்றார்கள்.

என்னடாயிது இப்பதான் பார்சல் செய்தேன் மறுபடியும் பிரிக்க வேண்டுமா என மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டே.... 


சரி எவ்வளவு ஆகும் மேடம் என்றேன்... 


Ordinary யா speed டா என மெதுவாக கேட்டார்கள். என்ன மேடம் புரியல

Ordinary யா speed டா என்று இந்த முறை சத்தமாக கேட்டார்கள். Ordinary எவ்வளவு? Speed எவ்வளவு? என வினவினேன். 


Ordinary போஸ்ட் 1070 ரூபாய் Speed போஸ்ட் 1700 ரூபாய் என்றார்கள். சரி என்று கிளம்பினேன். 


சார் ஒரு நிமிஷம் என்ற குரல் ஒலித்தது...

சொல்லுங்க மேடம்...

சார் நாளைக்கு வரும்போது ஆதார் கார்டு ஜெராக்ஸ் இரண்டு காப்பி கொண்டுவாங்க... 


ம்ம்ம்... என்று கிளம்பிவிட்டேன்... 


மறுநாள் காலை 11 மணிக்கு

குடந்தை போஸ்ட் ஆபீஸ்க்கு விரைந்து சென்றேன்... 


பார்சலை பிரித்து, உள்ளே என்ன இருக்கிறது என செக் செய்தார்கள். அவர்கள் அனுமதியுடன் அங்கிருந்த செல்லோ டேப்பை எடுத்து மீண்டும் ஒட்ட ஆரம்பித்தேன். 


சார் எல்லாத்தை சுத்தி முடித்து விடாதீர்கள். சரி நீங்க வெளியே போய் அலைய வேண்டாமென்று கொடுத்தேன். பார்த்து சார்... 


சரிம்மா என்று குறைந்த அளவே செல்லோ டேப்பை பயன்படுத்தி ஒரு வழியாக ஒட்டி முடித்தேன். கையெழுத்து இட்ட

ஒரு ஆதார் கார்டு ஜெராக்ஸ் காப்பியை பார்சல் மேலே ஒட்டினார்கள். 


ஓகே சார் அங்கே இருக்கும் கவுண்டரில் கொடுங்க என்று கையை காட்டினார்கள்... 


நேற்று விசாரித்த கவுண்டருக்கு வந்தேன். சார் நான் கொஞ்சம் பிசி!

பக்கத்துக்கு கவுண்டரில் கொடுங்க என்ற குரல் ஒலித்தது... 


பக்கத்துக்கு கவுண்டரில் கொடுத்தேன். சார் இங்கே சிஸ்டம் சரியாக காட்டமாட்டேங்குது... அங்கேயே கொடுங்க! 


மறுபடியும் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றேன். எல்லாத்தையும் சரி செய்து பார்த்து விட்டு, பணம் 1070 ரூபாயை வாங்கி கல்லாப்பெட்டியில் போட்டுவிட்டு, சார் பில் எங்கே என்றார். அதற்கு நான், பில் நீங்கத்தான் கொடுக்க வேண்டும் என்றேன். சா....ர் புத்தகம் வாங்கிய பில், என்னிடம் இல்லை என்றேன் (புத்தகத்துடன் நண்பர் அனுப்பிய பில்லை தொலைத்து விட்டேன்). 


எனக்கு தெரியாது பில் இருந்தால் மட்டும்தான் வெளிநாட்டுக்கு அனுப்புவோம் என்றார்கள் அலுவலர். நான் பொறுமை இழந்து சரிம்மா நான் படித்த பழைய புத்தகத்தை அனுப்ப வேண்டும், வீட்டில் செய்த முறுக்கை அனுப்ப வேண்டும் பில்லுக்கு எங்கே போவது கொஞ்சம் நேரம் வாக்கு வாதம். அந்த அலுவலர் தலைமை அதிகாரியை பார்த்து நடந்த விஷயத்தை கூறினார்கள். கவுண்டர் அருகில் வந்து அந்த அலுவலர் சார் உங்க பார்சலை அனுப்புகிறோம் ஆனா ஒன்னு... என்று இழுத்தார்..... 


என்ன சார் என்றேன். 


திரும்பி வந்தால் அதற்காக பில் தொகை 1070 ரூபாயை செலுத்தி இந்த பார்சலை பெற்றுக் கொள்வேன் என்று ஒரு பேப்பரை நீட்டி கையெழுத்து போட சென்னார்கள். 


நான் உடனே வேண்டாம் சார், புத்தம் அனுப்பும் ஆசையே விட்டுபோய் விடும் போல் இருக்கு... 


நான் பில்லோடு வருகிறேன்... நான் ரெகுலராக புத்தகம் வாங்கும் கடையில் பில் வாங்கி இந்த பார்சலின் மேல் ஒட்டி , அடுத்த 10 நிமிடத்தில் அதே கவுண்டரில் நின்றேன். அந்த அம்மா மெல்லிய குரலில் சார் சிஸ்டம் restart செய்துள்ளேன். பக்கத்துக்கு கவுண்டரில் கொடுங்க என்றார். 


கொஞ்சம் கணீரென்ற குரலில் எனக்கும் கம்ப்யூட்டர் தெரியும். restart ஆகும் வரை வெயிட் செய்கிறேன்... 


இந்தாங்க பணம் என நேற்று திரும்பி வாங்கிய 1070 ரூபாயை செலுத்திவிட்டு, 2 நிமிடம் வெயிட் செய்தேன்.... 


பின்பு ஓரு வழியாக என்ட்ரி போட்டு, பில் கொடுத்தார்கள். மீதமுள்ள ஒரு ஆதார் கார்டு, Reciept -ல் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு bill லை பெற்றுக் கொண்டு நடையைக் கட்டினேன்... 


கடைசியாக வரும்போது அந்த மேடத்திடம் இந்த அனுபவத்தை எழுதலாம் என இருக்கேன் என்றேன் சிரித்துக் கொண்டே... 


ஓ தாராளமாக.... 


(பார்சல் போய் சேர 20 - 25 நாட்கள் அதிகமாகும் என்றார்கள். 12 நாட்களுக்குள் பெறுநர் பெற்றுவிட்டார். நீங்கள் படத்தில் பார்க்கும் நண்பரின் சிரிப்பில் தெரிகிறது... நிச்சயம் அனைத்து பக்கங்களையும் படித்துவிடுவார்... 


மலேசியா வரும் நண்பர் யாரிடமாவது இரு புத்தகங்களையும் கொடுத்து அனுப்பவா என கேட்டேன். வேண்டாம் அஞ்சலில் அனுப்பிவிடுங்கள் என்றார்.

இந்நூல்களை வாங்கி படிக்க வேண்டுமேன ஆர்வமாக இருந்த நண்பர் #நியமத்_அப்துல்_ரகீம்.

அவரின் வாசிப்பு விருப்பத்தை பாராட்டுகிறேன். 


தமிழ், கணிணி இரண்டிலும் ஆர்வமுள்ள நெருங்கிய நண்பர் R. #அகிலன் அவர்கள்தான், நான் கைபேசியில் தொடர்பு கொண்டவுடன் புத்தகங்களை வாங்கி பாதுகாப்பாக பார்சல் செய்து எனக்கு அனுப்பியவர். அவரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. 


குறிப்பு:

1.குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்ப தனியார் கூரியர் சர்வீஸை விட இந்தியன் பார்சல் சர்வீஸ் சிறந்தது. 


2. பார்சல் போய் சேர 20 - 25 நாட்கள் ஆகும். 


3. பார்சல் திரும்பி வந்தால் அனுப்புனர் பணத்தை செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். 


4. ஆதார் நகல் இரண்டு தேவை. 


5.பார்சலை தபால் நிலையத்திற்கு சென்று கட்டுங்கள்/ஒட்டுங்கள். 


6. அனுப்பும் பொருளுக்கு பில் வேண்டும். 


7.விலாசத்தை ஆங்கிலத்தில் CAPITAL LETTER- ல் தெளிவாக எழுதுங்கள். 


8.குறிப்பாக ஒரு பேனா கொண்டு போங்கள். அங்கே இரவல் வாங்க வேண்டாம்


- ஆவுடை யூனுஸ்

Thursday, 23 May 2024

துணை மருத்துவப் படிப்புகள்

மருத்துவத்துறை என்பது ஒரு பெருங்கடல். அது மருத்துவர்களால் மட்டும் முழுமையடைவது இல்லை. அங்கே மருத்துவருக்கு இணையான முக்கியத்துவம் பெற்ற பலர் உள்ளனர். பொது மருத்துவம் (MBBS/BDS) படிக்க NEET தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகின்றது. +2 முடித்த பிறகு துணை மருத்துவத் துறையில் (Paramedical medical/Allied health science) படிப்பதற்கு ஏராளமான படிப்புகள் உள்ளன. இதற்கு NEET தேர்வு அவசியம் இல்லை, பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) பாடங்களைப் படித்த மாணவர்கள் மட்டுமே இந்த மருத்துவ படிப்புகளைப் படிக்க முடியும். மிகவும் சொற்பமான சில மருத்துவ படிப்பிற்கு இயற்பியல், வேதியியல், கணிதம் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

துணை மருத்துவப் படிப்புகள்: 

1. B.PHARM 

2. PHARM.D 

3. B.P.T. 

4. B.ASLP 

5. B.Sc. (NURSING) 

6. B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY 

7. B.Sc. RADIO THERAPY TECHNOLOGY 

8. B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY 

9. B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY 

10. B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY 

11. B.Sc. CARDIAC TECHNOLOGY 

12. B.Sc. CRITICAL CARE TECHNOLOGY 

13. B.Sc. DIALYSIS TECHNOLOGY 

14. B.Sc. PHYSICIAN ASSISTANT 

15. B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY 

16. B.Sc. RESPIRATORY THERAPY 

17. B.OPTOM 

18. B.O.T 

19. B.Sc.NEURO ELECTRO PHYSIOLOGY 

20. B.Sc.CLINICAL NUTRITION 

மேற்கண்ட படிப்புகளில் படிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்க வேண்டிய இணையதளம்: https://tnmedicalselection.net/ தங்களுக்கு மருத்துவத்துறையில் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அந்த எண்ணத்திற்கு எனது பாராட்டுகள். ஏனென்றால் மருத்துவம் என்பதே சேவைதான். இங்கு பலர் மருத்துவத்துறையை பணம் காய்க்கும் மரமாக பார்க்கிறார்கள். அந்த எண்ணம் நீக்கப்பட வேண்டும். “சேவையே முதன்மை” என்ற எண்ண ஓட்டத்தில் நீங்கள் மருத்துவத்துறையில் நன்றாகப் படித்து முடித்து பணியாற்ற வேண்டும். 

 உனக்கான பாதை 

எதுவென்று தீர்மானித்து 

படி விடாமல் படி! 

வெற்றியைத் தனதாக்க 

படித்து முடி!!

 - ஆவுடை யூனுஸ்

24.05.2024

Wednesday, 8 May 2024

நீங்கள் +2 முடித்தவரா?

நீங்கள் +2 முடித்தவரா? 

சட்டம், பொறியியல், கலை & அறிவியல், மருத்துவம், வேளாண்மை, மீன்வளம் சார்ந்த மேற்படிப்புப் படிக்க கீழே உள்ள இணைய தளத்தில் விண்ணப்பித்து தங்களின் கல்வி பாதையைத் தீர்மானித்து கொள்ளுங்கள் அன்பு மாணவர்களே. 

1.தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து சட்டம் படிக்க - மே 10 முதல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

  www.tndlau.ac.in

 2.பொறியியல் படிப்புகளில் சேர மே 6 முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம். 

www.tneonline.org

3.தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரில் BA/B.Com/BBA/B.Sc/BCA போன்ற பட்டப்படிப்பில் சேர மே 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

www.tngasa.com

4.மெடிக்கல் கவுன்சிலிங் Pharm/ Paramedical/ Nursing... போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளங்கள்.

www.tnhealth.tn.gov.in

www.tnmedicalselection.net

5. வேளாண் மீன்வளப் படிப்புக்கு ஒரே விண்ணப்பம் www.tnagfi.ucanapply.com (மே 7 முதல் ஜூன் 6 வரை) மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விபரங்களை மேலும் அறிய

அ)வேளாண்மைப் பல்கலைக்கழகம் www.tnau.ac.in

ஆ)மீன்வளப் பல்கலைக்கழகம் www.tnjfu.ac.in

 கல்வியே அழியா சொத்து!

கல்வியே உன்னை உயர்த்தும்!! 

படி... நல்லா படி... நல்லதை மட்டுமே படி... 

 - ஆவுடை யூனுஸ் சீனியார் M.Sc., M.Phil., M.A., B.Opt., PGDNLP., SLET.,

Tuesday, 17 October 2023

ஒருகோடி பனை விதைகள் நடும் பணி

    புதுக்கோட்டை, அம்மாப்பட்டினம் அக் 1, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை 1076 கிலோ மீட்டர் தூரம் 14 மாவட்டங்களில் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரியம், கீரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப் பணித்திட்டம் இணைந்து முன்னெடுத்து ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்யும் பணி அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மேற்கொள்ளப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரையோரத்தில் கட்டுமாவடி முதல் அரசாங்கரை வரை 43 கிலோ மீட்டர் தூரம் அளவில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி, சீனியார் அன்பறிவகம் மற்றும் புன்னகை அறக்கட்டளை இணைந்து முன்னெடுத்து இப்பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்தனர். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி B.Sc.,BL., அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மணமேல்குடி ஒன்றியம் அம்மாப்பட்டினம் கடற்கரையோரத்தில் துவக்கிவைத்தார்கள். மேலும் சில இடங்களை பார்வையிட்டு பனைமரத்தின் பயன்களை பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் திரு.கே.ஆர்.ரஞ்சன்துரை அவர்கள்,மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் திரு.பரணி இ.ஏ.கார்த்திகேயன் அவர்கள், மணமேல்குடி ஒன்றிய துணைப் பெருந்தலைவர், மணமேல்குடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர், திரு.எஸ்.எம்.சீனியார் அவர்கள், அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.எம்.அஹமது தம்பி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணியின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் திமுக சுற்றுச்சூழல் அணி தலைவருமான ஆவுடையூனுஸ் சீனியார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நன்றியுரை சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் எஸ்.எம்.குமரேசன். சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் வெங்கடாசலம், துணை அமைப்பாளர்கள் பாரதிராஜா, சந்திரபோஸ், சிவகுமார், லால்பகதூர், பொற்செல்வம் போன்றோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நகர, பேரூர் ஒன்றிய பெருந்தலைவர்கள் - துணைப் பெருந்தலைவர்கள், நகர, பேரூர், ஒன்றிய செயலாளர்கள், அனைத்து அணியினர், பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் - துணைத்தலைவர்கள், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள், நற்பணி மன்றம், பேரவை, அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் போன்றோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இம்மாவட்டத்திற்கு உட்பட்ட கடற்கரை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை ஓரங்களில் பனை விதைகள் நடவு செய்த இடங்கள்: 

1.கட்டுமாவடி 

2.கிருஷ்ணாஜிப்பட்டினம் 

3.கண்டனிவயல்

 4.மும்பாலை 

5.மணமேல்குடி 

6.ஆவுடையார்பட்டினம் 

7.அம்மாப்பட்டினம் 

8.ஆதிப்பட்டினம் 

9.வன்னிச்சிப்பட்டினம் 

10.கோட்டைப்பட்டினம் 

11.பாலக்குடி 

12.குமரப்பன்வயல் 

13.கோபாலப்பட்டினம் 

14.சேமங்கோட்டை 

15.முத்துகுடா

மென்காற்றே போதுமடி

மயில் தோகை தேவையில்லை சாய்ந்து கொள்ள மடியும் தேவையில்லை மென்காற்றே போதுமடி மணற்பரப்பில் நிற்கையிலே..! இடம்: தனுஷ்கோடி

Tuesday, 12 September 2023

உப்புக் காற்று

மயக்கத்திலிருந்து

என்னை யாராவது

எழுப்பி விடுங்களேன்

அவள் எனக்குள்

ஊடுருவி வெப்பக்

காற்றாய் வீசுகிறாள்

செய்வது தெரியாமல்

மெழுகாய் உருகுகிறேன்

உப்புக் காற்றில்...




✍ ஆவுடை யூனுஸ

பனை விதை வங்கி சீனியார் அன்பறிவகம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி சீனியார் அன்பறிவகம் பனை விதை வங்கி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரை 1076 கிலோ மீட்டர் 14 கடற்கரை மாவட்ட ஓரங்களில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் பணியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் 24 அன்று தொடங்கி வைக்கயுள்ளார். தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரியம், கீரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டுநலப் பணி திட்டம் இணைந்து முன்னெடுக்கும் இப்பணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சீனியார் அன்பறிவகம் மற்றும் புன்னகை அறக்கட்டளை சார்பாக நான்கு லட்சம் பனை விதைகள் சேகரிக்கும் பணியை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.டி. இராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். அதற்காக 07.09.2023 வியாழன் அன்று அறந்தாங்கி தொகுதி மணமேல்குடியில் சீனியார் அன்பறிவகம் அருகில் பனை விதை வங்கி நிலையத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.டி. இராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார் . இந்த பனை விதை வங்கியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தானாக முன்வந்து அப்பகுதியில் இருக்கக்கூடிய பனை விதைகளை வழங்கலாம் என கூறினார்.
மணமேல்குடி ஒன்றிய துணைப் பெருந்தலைவர், திரு. சீனியார் (எ) எஸ்.எம்.முகம்மது அப்துல்லா அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். சாதி மத பேதமின்றி, கட்சி பாகுபாடுயின்றி அனைவரும் இந்த நற்பணியில் பங்குகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் சுற்றுச்சூழல் அணி தலைவர் திரு.ஆவுடையூனுஸ் சீனியார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். பனை விதைகளை அனுப்பும் அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார். கிராம பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tuesday, 4 October 2022

குறுங்காடு திட்ட துவக்க விழா

குறுங்காடு திட்ட துவக்க விழா மற்றும் உழவை நேசிக்கும் உழவருக்கு விருது வழங்கும் விழா குடந்தை மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக SRVS வளாகத்தில் சிறப்புடன் நடைபெற்றது. மிக்க மகிழ்ச்சி...
#மியாவாக்கி | #குறுங்காடு | #அடர்வனம் | #சுற்றுச்சூழல் #AYS 23.09.2022

Thursday, 5 May 2022

கோடைவெயிலுக்கு ஏற்றது நுங்கு

 கோடைவெயிலுக்கு ஏற்றது நுங்கு ..! 


உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை கொடுப்பதிலும்  உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.  





குளிர்பானங்கள் குடிப்பதைவிட

நுங்கு ஆகச் சிறந்தது... 


கட்டுமாவடி -அறந்தாங்கி சாலை நெம்மலிக்காடு நுங்கு வியாபாரி பழனியப்பனிடம் நுங்கு வாங்கி சுவைத்தோம். லாவகரமாக நுங்கை வெட்டுவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். சாலையோர வியாபாரிகளிடம் பேரம் பேசாமல் நுங்கு, கிழங்கு, பதநீர், மோர், தர்பூசணி போன்றவைகள் சுவைத்து பாருங்கள். அவர்கள் வாழ்வுக்கும் சுவையூட்டுங்கள்... 


- ஆவுடை யூனுஸ்