சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Tuesday, 12 September 2023

பனை விதை வங்கி சீனியார் அன்பறிவகம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி சீனியார் அன்பறிவகம் பனை விதை வங்கி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரை 1076 கிலோ மீட்டர் 14 கடற்கரை மாவட்ட ஓரங்களில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் பணியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் 24 அன்று தொடங்கி வைக்கயுள்ளார். தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரியம், கீரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டுநலப் பணி திட்டம் இணைந்து முன்னெடுக்கும் இப்பணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சீனியார் அன்பறிவகம் மற்றும் புன்னகை அறக்கட்டளை சார்பாக நான்கு லட்சம் பனை விதைகள் சேகரிக்கும் பணியை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.டி. இராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். அதற்காக 07.09.2023 வியாழன் அன்று அறந்தாங்கி தொகுதி மணமேல்குடியில் சீனியார் அன்பறிவகம் அருகில் பனை விதை வங்கி நிலையத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.டி. இராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார் . இந்த பனை விதை வங்கியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தானாக முன்வந்து அப்பகுதியில் இருக்கக்கூடிய பனை விதைகளை வழங்கலாம் என கூறினார்.
மணமேல்குடி ஒன்றிய துணைப் பெருந்தலைவர், திரு. சீனியார் (எ) எஸ்.எம்.முகம்மது அப்துல்லா அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். சாதி மத பேதமின்றி, கட்சி பாகுபாடுயின்றி அனைவரும் இந்த நற்பணியில் பங்குகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் சுற்றுச்சூழல் அணி தலைவர் திரு.ஆவுடையூனுஸ் சீனியார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். பனை விதைகளை அனுப்பும் அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார். கிராம பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment