சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Foreign Visit-Mauritius

At the time of taking class in Mauritius - 2014

உண்மையை உரக்கப் பேசு!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

நல்ல கல்வியை நோக்கி!

கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும் - முஹம்மது நபி (ஸல்)

எதிர் நீச்சல்

போராடக் கற்றுக்கொள்!

Tuesday, 30 January 2018

சொந்த மண்


*சொந்த மண்*

சொந்தங்களை பார்க்க,
சோகங்களை மறக்க,
சகோதரத்தை வளர்க்க,
சகதியில் விளையாட
இன்னும் ஏராளம்...
பண்டிகை காலமாவது
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

பழைய
காலத்திற்கு செல்வோம்!
பாதம் பதித்த
பாதைகளை பார்ப்போம்!
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

தொழில் செய்யும்
இடத்திலிருந்து,
பயணம் செய்து
தொழுத பள்ளியை
தொட்டுப் பார்க்க
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

சோகம் மறந்து
திட்டங்கள் தீட்டும்
சோம்பேறி மடம்
அதில் நீ பதித்த
தடத்தைக் காண
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

தொலைந்த
கனவுகளை மீட்டெடுக்க
தொலைதூர
பயணம் செய்தாலும்
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

உன் முகங்காண
தழைத்து நிற்கும்
செடிகளுக்கு
தண்ணீர் ஊற்ற
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

தூர்வாரிய
மங்கேணி குளத்தை
துள்ளிக் குதித்துப் பார்க்க
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!


மறந்துபோன
சிறுவயது விளையாட்டை
உம்மத்துக்கு உணர்த்துவோம்!
உலகிற்கு வெளிப்படுத்துவோம்!
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

கார்ட்டூன்
சித்திரத்தை மறந்து,
கைபேசி
விளையாட்டை துறந்து,
கடற்கரை மைதானத்தில்
கலகலப்பாக விளையாடலாம்.
சொந்த மண்ணிற்கு
வா சகோதரா! வா!

✍*ஆவுடை யூனுஸ்*



கைபேசி தமிழ் கலைச்சொற்கள்


*கைபேசிக் கலைச்சொல் அகராதி என்ற நூலிலிருந்து தமிழ் கலைச்சொற்கள்:* (ஆசிரியர் குழு: கோ.பழனிராஜன், லெ.ராஜேஷ், மு.முகமது யூனுஸ் [ஆவுடை யூனுஸ்], அகிலன் இராசரெத்தினம்)

Activation - இயங்குவித்தல்
Adapter - பொருத்தி
Alarm - அறிவிப்பொலி
Animation - அசைவூட்டம்
App - குறுஞ்செயலி
Archive - ஆவணக்காப்பகம்
Audio Player - ஒலி இயக்கி
Back Camera - பின்புற நிழற்படக்கருவி
Backup - காப்புநகல்
Battery - மின்கலன்
Broadcast - ஒலிபரப்பு
Browser - உலவி
Call - அழை, அழைப்பு
Call Log - அழைப்புத் பதிவு
Camera - புகைப்படக்கருவி
Card - அட்டை
Charge - மின்னூட்டம்
Charger - மின்னூட்டி
Chat - அரட்டை
Chat Room - அரட்டை அறை
Chip - மின்குழு
Click - சொடுக்கு
Clipboard - பிடிப்புப் பலகை
Connector - இணைப்பி
Converter - மாற்றி
Copy - நகலெடு
Cut – வெட்டு
DailyHunt - தினவேட்டை
Data - தரவு
Data Roaming - தரவு இடப்பெயர்ச்சி
Data Card – தரவட்டை
Delete - நீக்குக
Demo - முன்னோட்டம்
Disk - வட்டு
Display Card - காட்சி அட்டை
Display Size - காட்சி அமைப்பு
Downlink - பதிவிறக்க இணைப்பு
Download - பதிவிறக்கம்
Earphone - செவிப்பொறி
Email - மின்னஞ்சல்
Export - பதிவேற்று
Extension Card - விரிவாக்க அட்டை
Facebook - முகநூல்
Face Detection - முகம் கண்டறிதல்
Finger Touch - தொடுவிரல்
Flash - மின்வெட்டொளி
Folder - கோப்புறை
Font - எழுத்துரு
Front Camera - முன் ஒளிப்படக்கருவி
Gallery - படத் தொகுப்பு
Games – விளையாட்டுகள்
Google Map - கூகுள் வரைபடம்
Group Chat - குழு அரட்டை
Groups – குழுக்கள்
Help Text - உதவி உரை
Handset - கைப்பேசி சாதனம்
High Density - உயர் அடர்த்தி
Home – முகப்பு
Icon - குறும்படம்
Import - பதிவிறக்கி
Inbox - உள்பெட்டி
Install - நிறுவுக
Junk File - குப்பைக் கோப்பு
Keyboard – விசைப்பலகை
Keyword - மையச்சொல்
License Key - உரிமம் எண்
Loader - ஏற்றி
Log - பதிவு
Mass Storage - பெருந் தேக்ககம்
Media - ஊடகங்கள்
Memo - குறிப்பானை
Memory - நினைவகம்
Memory Card - நினைவக அட்டை
Menu - பட்டி
Message – குறுஞ்செய்தி
Messenger - தூதர்
Mobile – கைபேசி
Multimedia - பல்லூடகம்
Mute - ஒலிநிறுத்தம்
New File - புதிய கோப்பு
Network - வலையமைப்பு
Notifications - அறிவிப்புகள்
Offline - இயக்காநிலை
Online – இணையம்/இயங்கலை
Operating System - இயங்குதளம்
Option - விருப்பம்
Panorama - அகலப்பரப்புக்காட்சி
Paste - ஒட்டு
Pixel - படப்புள்ளி
Plug - செருகி
Privacy - தனியுரிமை
Profile – சுயவிவரம்
Quit – வெளியேறு
Queue – சாரை
Range - வீச்சு
Reader - படிப்பான்
Reboot - மீண்டும் துவக்குக
Receiver - பெறுபவர்
Recorder - பதிப்பி
Recovery - மீட்பு
Refresh - புதுப்பி
Remove - நீக்கு
Rename - பெயர்மாற்று
Replace - மாற்றுக
Restart - மறுதொடக்கம்
Restore - மீட்டெடு
Ringtone - அழைப்பு ஓசை
Save - சேமி
Scanner - வருடி
Scratch Card - சிராய்ப்பு அட்டை
Screen - திரை
Screen Lock - திரைப் பூட்டு
Security – பாதுகாப்பு
Selfie – தனவி
Serial - தொடர்
Shut Down - நிறுத்துக
Signal – சமிக்ஞை
Smartphone – திறன்பேசி
Sound Card - ஒலி அட்டை
Speaker - ஒலிபெருக்கி
Spectrum - அலைக்கற்றை
Subscriber - வாடிக்கையாளர்
Tablet – வரைப்பட்டிகை
Telegram  - தந்தி
Template - வார்ப்புரு
Text - உரை
Theme - எழிலமைப்பு
Tools - கருவிகள்
Touch – தொடுக
Touch Screen - தொடு திரை
Tower - கோபுரம்
Track – பின்தொடர்
TrueCaller - உண்மை அழைப்பி
Twitter - சுட்டுரை
Uninstall - நிறுவல்நீக்கு
Unlock - தடைநீக்கு
Unzip - விரி
Update - புதுப்பி
Upload - பதிவேற்று
Vibration - அதிர்வு
Video – ஒளிகாட்சி
Video Player - ஒளிக்காட்சி இயக்கி
Virus – நச்சுநிரல்
Voice Call - குரல் அழைப்பு
Voice Search - ஒலித் தேடல்
Volume - ஒலியளவு
Wall Paper - காட்சி சித்திரம்
Warning - எச்சரிக்கை
Web - வலை
Web Site – வலைத்தளம்
Whatsapp – பகிர்வஞ்சல்
YouTube - இணையத்திரை, வலையொளி
Zip - குறுக்கம்
Zoom – பெரிதாக்கு

*✍ஆவுடை யூனுஸ்*