சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Foreign Visit-Mauritius

At the time of taking class in Mauritius - 2014

உண்மையை உரக்கப் பேசு!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

நல்ல கல்வியை நோக்கி!

கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும் - முஹம்மது நபி (ஸல்)

எதிர் நீச்சல்

போராடக் கற்றுக்கொள்!

Tuesday, 17 October 2023

ஒருகோடி பனை விதைகள் நடும் பணி

    புதுக்கோட்டை, அம்மாப்பட்டினம் அக் 1, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை 1076 கிலோ மீட்டர் தூரம் 14 மாவட்டங்களில் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரியம், கீரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப் பணித்திட்டம் இணைந்து முன்னெடுத்து ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்யும் பணி அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மேற்கொள்ளப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரையோரத்தில் கட்டுமாவடி முதல் அரசாங்கரை வரை 43 கிலோ மீட்டர் தூரம் அளவில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி, சீனியார் அன்பறிவகம் மற்றும் புன்னகை அறக்கட்டளை இணைந்து முன்னெடுத்து இப்பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்தனர். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி B.Sc.,BL., அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மணமேல்குடி ஒன்றியம் அம்மாப்பட்டினம் கடற்கரையோரத்தில் துவக்கிவைத்தார்கள். மேலும் சில இடங்களை பார்வையிட்டு பனைமரத்தின் பயன்களை பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் திரு.கே.ஆர்.ரஞ்சன்துரை அவர்கள்,மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் திரு.பரணி இ.ஏ.கார்த்திகேயன் அவர்கள், மணமேல்குடி ஒன்றிய துணைப் பெருந்தலைவர், மணமேல்குடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர், திரு.எஸ்.எம்.சீனியார் அவர்கள், அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.எம்.அஹமது தம்பி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணியின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் திமுக சுற்றுச்சூழல் அணி தலைவருமான ஆவுடையூனுஸ் சீனியார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நன்றியுரை சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் எஸ்.எம்.குமரேசன். சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் வெங்கடாசலம், துணை அமைப்பாளர்கள் பாரதிராஜா, சந்திரபோஸ், சிவகுமார், லால்பகதூர், பொற்செல்வம் போன்றோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நகர, பேரூர் ஒன்றிய பெருந்தலைவர்கள் - துணைப் பெருந்தலைவர்கள், நகர, பேரூர், ஒன்றிய செயலாளர்கள், அனைத்து அணியினர், பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் - துணைத்தலைவர்கள், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள், நற்பணி மன்றம், பேரவை, அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் போன்றோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இம்மாவட்டத்திற்கு உட்பட்ட கடற்கரை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை ஓரங்களில் பனை விதைகள் நடவு செய்த இடங்கள்: 

1.கட்டுமாவடி 

2.கிருஷ்ணாஜிப்பட்டினம் 

3.கண்டனிவயல்

 4.மும்பாலை 

5.மணமேல்குடி 

6.ஆவுடையார்பட்டினம் 

7.அம்மாப்பட்டினம் 

8.ஆதிப்பட்டினம் 

9.வன்னிச்சிப்பட்டினம் 

10.கோட்டைப்பட்டினம் 

11.பாலக்குடி 

12.குமரப்பன்வயல் 

13.கோபாலப்பட்டினம் 

14.சேமங்கோட்டை 

15.முத்துகுடா

மென்காற்றே போதுமடி

மயில் தோகை தேவையில்லை சாய்ந்து கொள்ள மடியும் தேவையில்லை மென்காற்றே போதுமடி மணற்பரப்பில் நிற்கையிலே..! இடம்: தனுஷ்கோடி