கோடைவெயிலுக்கு ஏற்றது நுங்கு ..!
உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை கொடுப்பதிலும் உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.
குளிர்பானங்கள் குடிப்பதைவிட
நுங்கு ஆகச் சிறந்தது...
கட்டுமாவடி -அறந்தாங்கி சாலை நெம்மலிக்காடு நுங்கு வியாபாரி பழனியப்பனிடம் நுங்கு வாங்கி சுவைத்தோம். லாவகரமாக நுங்கை வெட்டுவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். சாலையோர வியாபாரிகளிடம் பேரம் பேசாமல் நுங்கு, கிழங்கு, பதநீர், மோர், தர்பூசணி போன்றவைகள் சுவைத்து பாருங்கள். அவர்கள் வாழ்வுக்கும் சுவையூட்டுங்கள்...
- ஆவுடை யூனுஸ்