Please Contribute generously to the Kerala Chief Minister's Distress Relief Fund (CMDRF) through Donation Portal
https://donation.cmdrf.kerala.gov.in/
எழில் கொஞ்சுமிடம்
இன்னலில் தவிக்கின்றதே!
சுற்றுலா நோக்கிச் செல்லுமிடம்
சுழன்று மிதக்கின்றதே!
மூணாறு தண்ணீரில்
கண்ணீர் கலந்தோடுகிறதே!
வயநாடு வளங்கள்
வழிநெடுகிலும் வழிகின்றதே!
சேட்டன், சேச்சி
அழுகுரல் செவியை துளைக்கின்றதே!
மலபார் தங்கமண்
வெள்ளத்தில் சுழல்கிறதே!
இறைவா!
மழை வேண்டி கையேந்தினேன்!
கனமழையை
கட்டவிழ்த்து விட்டாயே!
இறைவா!
ஆற்றில் நீரில்லை என்றேன்
வெள்ளப்பெருக்கு
கொடுத்துவிட்டாயே!
நிலமுண்டு வீடில்லை!
தண்ணீருண்டு தாகமில்லை!
அழுகையுண்டு கண்ணீரில்லை!
கண்ணீர் வற்றியஅழகு தேச மக்கள்
ஆதரவு கேட்கின்றன!
அண்டை மாநிலம் கேரளாவிற்கு
ஆதரவு கரம் கொடுத்து,
நேச மக்களை அரவணைப்போம்!
தேச மக்களை காப்போம்!
- ஆவுடை யூனுஸ்
Please Contribute generously to the Kerala Chief Minister's Distress Relief Fund (CMDRF) through Donation Portal
https://donation.cmdrf.kerala.gov.in/