சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Foreign Visit-Mauritius

At the time of taking class in Mauritius - 2014

உண்மையை உரக்கப் பேசு!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

நல்ல கல்வியை நோக்கி!

கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும் - முஹம்மது நபி (ஸல்)

எதிர் நீச்சல்

போராடக் கற்றுக்கொள்!

Thursday, 15 March 2018

ஆவுடை சிறகுகள்

தனி மரத்தில்
தனித்தனியாய்
வாழ்ந்த பறவைகள்
தோப்பை
உருவாக்கி
தோப்புக்குள்
தோழனாய்
வாழ்ந்து வருகின்றன
அதை பாரீர்!

என் கூடு
என் குடும்பம்
என்றில்லாமல்இந்நாடு
எம்நாடென
உதவ துடிக்கும்
உதிரங்கள் இந்த பறவைகள்!
உதவிக் கரம் தாரீர்!


ஆண் குருவி,
பெண் குருவி,
சிறுக் குருவி
மடுவு திறந்த
அருவி போல
மகிழ்ச்சி பொங்கி,
சொந்த மண்ணில் சந்திப்பு
என்றும் தித்திப்பு!
அதை காண வாரீர்!

சிறு துளி பெருவெள்ளம்
சிறுபணி என்றாலும்
அது சிறப்பணியே!

கைவிட்ட
பணிகளை
கையில் எடுத்து
கைகொடுக்கும் தோழனாக
இணையும் கரங்கள்
இந்த உயரப் பறக்கும்
ஊர்க்பறவை.

#AvudaiYoonus