சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Foreign Visit-Mauritius

At the time of taking class in Mauritius - 2014

உண்மையை உரக்கப் பேசு!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

நல்ல கல்வியை நோக்கி!

கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும் - முஹம்மது நபி (ஸல்)

எதிர் நீச்சல்

போராடக் கற்றுக்கொள்!

Tuesday, 17 November 2015

முஹம்மது நபி பொன் மொழிகள்

முஹம்மது நபி (ஸல்) அவர்களின்                       பொன் மொழிகள் :

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.

3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.

4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.

5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.

6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.

7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.

9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.

10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.

11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.

12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்கப்  பயிற்சியும் ஆகும்.

15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.

16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.

17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.

18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.

19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.

20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.

21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.

22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.

24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.

25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.

26. இறைவனின் உதவி எனும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.

27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.

28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.

29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள்.
 ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.

31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.

32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.

33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.

34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.

35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.

36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.

37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.

39. தீமைக்கு பின் அதை அழிக்க நன்மையை செய்யுங்கள்.

40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.

41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.

42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.

43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.

44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.

45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.

46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.

47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.

48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.

49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.

50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.

51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.

52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.

53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.

54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்

55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.

56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.

57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.

58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.

59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.

60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.



நன்றி: உண்மை உலகம்

Thursday, 12 November 2015

கணினித்தமிழ் ஆய்வாளர் - மு. மு. யூனுஸ்

[தமிழ்மொழி மற்றும் மொழியியல் ஆய்வாளர் - 25 ஆண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப்பணி - தமிழ்மொழித்துறைத் தலைவர் - மொழியியல் ஆய்வுப்பிரிவு இயக்குநர் - தற்போது சென்னையிலுள்ள  என்.டி.எஸ் லிங்க்சாஃப்ட் சொலூஷன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் முகநூலில் என்னை பற்றி கூறிய வரிகள்: (உங்கள் பார்வைக்கு)

அல்லாஹ்வின் நாட்டத்தினால், புதுக்கோட்டை மாவட்டம், அம்மா பட்டினம்(அஞ்சல்), ஆவுடையார் பட்டினம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த நான் முதன்மை ஆளாக  முதுகலை பட்டம் பெற்று, என் ஆராச்சி பணியில் முதல் படிக்கட்டு ஏறி உள்ளேன்  என்பதை பனிவுடன் கூறிக்கொள்கிறேன்.  இது தற்புகழ்ச்சியென எண்ண வேண்டாம் மாறாக இந்த பதிவு என்னை போன்று சிறிய கிராமங்களில்  பிறந்தவர்களுக்கு கல்வி பயில ஓர் உந்துசக்தியாக இருக்கும் என நம்புகிறேன்.]


கணினித்தமிழ் ஆய்வாளர் (5)

திரு. மு. முகமது யூனுஸ் .... நன்கு வளர்ந்துவருகிற ஒரு கணினிமொழியியலாளர். கணினியியல் , மொழியியல் இரண்டிலும் முறைசார் கல்விபெற்ற ஒரு இளம் ஆய்வாளர். கணினியியலில் எம்எஸ்சி பட்டம், எம்ஃபில் பட்டம் பெற்ற இவர், பின்னர் மொழியியலிலும் ஒரு முதுகலைப் பட்டமும் இயற்கைமொழி ஆய்வுத்துறையில் ஒரு முதுநிலைப்பட்டயமும் பெற்றிருக்கிறார். கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் துறையில் செயல்படுவதற்குரிய இரண்டு துறைகள் அறிவையும் பெற்ற இவர், தற்போது தரவக உதவியுடன் தமிழ்மொழியை மின்வழிக்கல்வியாக ( Corpus-based E-learning of Tamil ) அளிப்பதற்கான ஒரு ஆய்வைத் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக மேற்கொண்டுவருகிறார்.


கல்லூரிப்படிப்பிற்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் தஞ்சைப் பேராவூரணியில் வெங்கடேஸ்வரா கல்லூரியிலும் ஓராண்டு அறந்தாங்கியில் நைனா முகமது கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

2008 ஆம் ஆண்டு முதல் மைசூர் இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அங்கே இவரது துறை , இந்தியமொழிகளுக்கான மொழியியல் தரவுசேர்த்தியம் ( Linguistic Data Consortium for Indian Languages - LDC-IL) என்ற ஆய்வுத்திட்டத் துறையாகும்.இந்தத் திட்டம் இந்திய நடுவண் அரசின் 11-ஆம் ஐந்தாண்டுத்திட்டத்தில் நிறுவப்பட்டதாகும். இத்திட்டத்தின்கீழ் எழுத்து, பேச்சு, சைகைமொழித் தரவுகளைத் தரவகமையத்தில் சேமித்துப் பாதுகாத்தல், அதனடிப்படையில் தரவகம் சார்ந்த மொழிக்கருவிகளை உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொண்டுவருகிறார். இவரது வழிகாட்டுதலில் 12 மாணவர்கள் எம்ஃபில் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

இவர் தன்னுடன் பணியாற்றும் ஆய்வாளர்களுடன் இணைந்து, கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் சார்ந்த பல மொழிக்கருவிகளை உருவாக்கியுள்ளார்கள். அவற்றில் முக்கியமானவை - தரவகத்தில் எழுத்து. சொல் ஆகியவற்றின் நிகழ்வெண் ( Frequency Counter) , மையச்சொல் தேடல் ( Key word Finder), 12 இந்தியமொழிகளுக்கான சொல்வகையை அடையாளப்படுத்தும் கருவி, இந்திய மொழிகளை அடையாளம் காணும் கருவி ( Language Identifier), இஸ்கி குறியேற்றத்தில் உள்ள ஆவணங்களை ஒருங்குறிக் குறியேற்றத்தில் மாற்றித்தரும் குறியேற்றமாற்றி (Encoding Converter), உச்சரிப்பு அகராதி (Pronunciation Dictionary) ஆகியவையாகும்.

ஆறு ஆய்வுக்கட்டுரைகளைத் தரம்வாய்ந்த ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். தேசிய, சர்வதேசியக் கருத்தரங்குகள் பலவற்றில் பங்கேற்று ஆய்வுரை வழங்கியுள்ளார். தேசிய அளவில் மொழித்தொழில்நுட்பத்திற்கான பயிலரங்குகளை நடத்தியுள்ளார்.


2014 ஆம் ஆண்டு மொரிஷியஸ் நாட்டில் நடைபெற்ற கல்வியும் மொழித்தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு பயிலரங்கிற்குப் பயிற்சியாளராக அழைக்கப்பட்டிருந்தார். தரவகம், உருபனியல், இலக்கணக் குறிப்போடு அமையும் விரிதரவு ( Linguistically annotated Corpus) , தகவல்மீட்பு ( Information Retrieval) , எழுத்துரை-பேச்சுரைமாற்றி ( Text to Speech _ TTS) , மூடுல் இயங்குதளம் போன்றவற்றில் இளைஞர்களுக்கு பயிற்சியளித்துவருகிறார்.

தமிழ்மொழி, மொழியியல், கணினியியல் மூன்றிலும் திறன்பெற்ற இவரைப் போன்றவர்களால்தான் கணினித்தமிழ் வளரமுடியும். இவர்களைப் போன்ற இளைஞர்களுக்குத் தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வுநிறுவனங்களிலும் உரிய வேலைவாய்ப்பும், ஆய்வு மேற்கொள்வதற்குத் தேவையான சூழலையும் அளித்தால், ஒரு சில ஆண்டுகளில் கணினித்தமிழ் உலக அளவில் வளர்ச்சி அடைந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

-முனைவர் ந.தெய்வசுந்தரம்

[my mailid: yoonussoft@gmail.com]

Thursday, 5 November 2015

முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரிகள், தமிழ்நாடு

நான் தேடிய வகையில்  சுமார் 29 முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. உங்கள் பார்வைக்காக அதன் பட்டியல் கீழே அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை பார்க்கும்போது,  தமிழ்நாட்டில் இஸ்லாமிய கல்லூரியில் சேர்ந்து கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக  உள்ளன என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றன. ஆனால் முஸ்லிம் மக்கள் சிலரின் தவறுதலான வழிகாட்டலினால், கல்லூரி படிப்பை படிக்க ஏனோ முன்வரவில்லை என்பது வருந்தக் கூடிய விஷயமாக உள்ளன. இனிவரும் சமுதாயம் கல்வியில் (உலகம், மார்க்கம்), அரசியலில், சமூக சேவையில், தொழிலில், வர்த்தகத்தில் etc., சிறந்து விழங்க எல்லாம் வல்ல அல்லாஹ் துணை செய்வானாக! (ஆமீன்)
  1. Aiman College of Arts and Science for Women, Tiruchirappalli
  2. Annai College of Arts and Science is a college in Kovilacheri, Kumbakonam
  3. Annai Fathima College of Arts and Science, Tirumangalam, Madurai Dt
  4. Annai Hajira Women’s College, Melapalayam, Tirunelveli Dt
  5. Annai Khadeeja  Women’s College, Kandanivayal, Pudukkottai Dt
  6. C.Abdul Hakeem College of Arts and Science for Men, Melvisharam,  Vellore Dt
  7. Dr. Zakir Husain College, Ilayangudi
  8. Islamiah College (Autonomous) - Vaniyambadi
  9. Islamiah Women's Arts and Science College, Vaniayampadi
  10. Jamal Mohamed College ,Trichy
  11. Khadir Mohideen College, Adirampattinam, Thanjavur Dt
  12. M.I.E.T. College of Arts and Science, Trichy
  13. M.M.E.S Women's Arts & Science College, Melvisharam.
  14. Mazharul Uloom College, Ambur, Vellore Dt
  15. Mohamed Sathak College of Arts and Science, Chennai
  16. Muslim College of Education, Thiruvithankode, Kanyakumari
  17. Naina Mohamed College of Arts and Science, Aranthangi, Pudukkottai
  18. Noorul Islam College of Arts & Science, Kumaracoil, Kanyakumari Dt
  19. Quaid E- Milleth College for Men, Chennai
  20. Quaid E- Milleth College for Women, Chennai
  21. Rabiammal Ahamed Maideen College for Women, Tiruvarur, Thanjavur Dt
  22. Rajagiri Dawood Batcha College of Arts and Science, Thanjavur
  23. Sadakathullah Appa College,Rahmath Nagar, Tirunelveli
  24. SIET Women's College, Chennai
  25. Sulthana Adbullah Rowther College for Women, Thanjavur
  26. Syed Hameedha Arts & Science College, Kilakarai, Ramanathapuram Dt
  27. Thassim Beevi Abdul Kader College for Women, Kilakarai
  28. The New College, Chennai
  29. Wavoo Wajeeha Women’s College of Arts & Science, Kayalpatnam

இதில் ஆண்களுக்கென்று தனியான கல்லூரிகளும், பெண்களுக்கென்று தனியான கல்லூரிகளும் மற்றும் இருபாலரும் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளும் அடங்கும்.
                           எம்.எம்.யூனுஸ்
ஆவுடையார் பட்டிணம்

Monday, 26 October 2015

எந்த கல்வித்திட்டத்தை தேர்ந்தெடுப்பது?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

     இன்றைய காலகட்டங்களில், சமச்சீருக்கு முந்தயக் கல்வி, சமச்சீர் கல்வி, மற்றும் மதம் சார்ந்த கல்வி போன்ற கல்விகளை பற்றி பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

     ஒருவருடைய கல்வி சார்ந்த கருத்துக்கள் மற்றவருடைய கல்வி சார்ந்த கருத்திலிருந்து மாறுபடலாம். அதில் எந்த வித தவறும் இல்லை. ஏனெனில் கல்விக்கான பாடத்திட்டம் இறைவனால் உருவாக்கப் படவில்லை. அவைகள் மனிதர்களால் உருவாக்க கூடியதாக இருக்கின்றன. அதனால் ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட  பாடத்திட்டம் வேறொரு காலகட்டத்தில் தவறுகளாக தோன்றுகின்றன.

     மனிதன் ஒரு விஷயத்தை கண்டுபிடிப்பான், பின்பு அந்த கண்டுபிடிப்பு பொய்த்து போவது என்பது புதிதல்ல. ஏனெனில் மனிதன் என்பவன் தவறு செய்யக் கூடியவனே. உதாரணமாக, மனித இனம் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றது என்ற கடவுளின் இருப்பை மறுத்த சார்லஸ் டார்வினின் கொள்கை பொய்த்துப் போனது. ஆனால் இன்று நாம் பற்பல நோய்களால் பாதித்து கொண்டு இருக்கிறோம். அவற்றிற்கான மருந்துகளையும் ஆராச்சியாளர்கள் கண்டுப்பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆராச்சியாளர்கள் மருந்துகளை கண்டுப்பிடித்ததின் பயனாகத்தான் நாம் பல நோய்களுக்கான நிவாரணம் பெறுகிறோம். அலோபதி மருத்துவத்தில் தீர்க்க முடியாத வியாதிகளை யுனானி மருத்துவத்தில் தீர்க்கலாம், யுனானியில் முடியாததை ஆயுர்வேதத்தில் பலன் அடையாளம். அதற்காக ஆயுர்வேதம் தான் சிறந்தது, யுனானி தான்  சிறந்தது என வாதிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பலவகையான மருந்துகளை கண்டுபிடிக்கிறார்கள். நோயை  கொடுப்பவனும் அல்லாஹ்வே! அதை தீர்ப்பவனும் அல்லாஹ்வே! அது மட்டுமில்லாமல் இறைவன் வழங்கிய மூளையைக் கொண்டு பலவகையான புதுப்புது கண்டுபிடிப்புகளை மனிதன் நிகழ்த்துகிறான்.


     தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ இந்திய கல்வி முறை, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், சிபிஎஸ்ஈ மற்றும் மெட்ரிகுலேஷன் என ஐந்து வகையான பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த வகையான  பாடத்திட்ட முறைகளால், பல ஆண்டுகளாக ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்து வந்தன. அதை யாரும் மறுக்க முடியாது. மேலும், இத்தகைய கல்வி முறை சமூகத்தில் மாணவர்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வை உருவாக்கி வந்தது. தனியார் கல்வி நிறுவனங்களின் கண்மூடித்தனமான கட்டண கொள்ளைகளை இந்த கல்வி முறைகள் ஊக்கப்படுத்தியும் வந்தன. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 14-ம் பிரிவில் அனைவரும் சமம் என தெரிவித்தாலும், சாதி, சமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக எல்லோரும் ஒரே மாதிரியான கல்வியை பெற முடியவில்லை. அத்தகைய ஏற்றத்தாழ்வை சமச்சீர் கல்வி முறை நீக்கியுள்ளது. இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வு உள்ள நாட்டில் "சமச்சீர் கல்வி" என்பது அவசியத் தேவையாகும்.


  என்னுடைய பார்வையில் எல்லோருக்கும் ஏற்ற கல்வி சமச்சீர் ஒன்றே. ஆனால் இப்போது இருக்கும் சில குறைகளை களைந்து, அனைத்து சமுதாயப் படித்த கல்வியாளர்ககளை ஒன்றிணைத்து உருவாக்கும் கல்வியே சிறந்த கல்வி. இது ஒரு பொதுப் பிரிவு (General Category) போல யாருவேண்டுமானாலும் கற்க கூடிய ஒன்று. இஸ்லாம் சார்ந்த கல்வி, கிருஸ்த்துவர் சார்ந்த கல்வி, இந்து சார்ந்த கல்வி என்பது ஒதுக்கப்பட்ட பிரிவு (Reserved Category) யை போல அந்தந்த மதத்தினருக்கு உரியதே!


     வேற வழியில்லை என்று நான் சமச்சீர் கல்வியை கூறவில்லை, மாற்றம் வேண்டும் என்றுதான் கூறுகிறேன். அந்த மாற்றம் நிகழ ஆட்சி அதிகாரம் நம் கையில் வரவேண்டும். அதற்கு  கல்வி அவசியம். அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் பாடத்திட்டத்தை(Syllabus)  உருவாக்கும் கல்வியாளர்களாக நாம் மாற வேண்டும் அல்லது கல்வியாளர்களை நாம் உருவாக்க முயல வேண்டும்.


 கல்வி என்பது கல்வியால் கிடைக்கும் அறிவு வாழ்க்கைக்குப் பயன்படும்போது அந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாக அமைகிறது. எந்த ஒரு பாடச்சாலையிலும் தன் குடும்பம், தன் வேலை மட்டுமே முக்கியம் என்று கூறவில்லை. India is my country all Indian are brothers and sisters என்றுதான் கூறுகிறது. ஆசிரியராக பணியாற்றுபவர்கள், IT நிறுவனத்தில் பணிபுரிய கூடியவர்கள், மருத்துவர்கள் போன்ற கல்வி கற்ற நல்ல மனிதர்கள் எந்த வித விளம்பரமும் இல்லாமல் சமூக சேவை  செய்து வருகிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் பலபேர்களுக்கு தெரிவதே இல்லை. எல்லாம் இறைவன் அறிவான்! 

     பிற மக்களுக்கு அறிவாக புகட்டப்படும் அனைத்தும் முஸ்லிம்களுக்கு பொருந்துமா? என கேள்வி எழலாம். ஏன் பொருந்தாது, பொதுவான பாடங்கள் அனைத்தும் எல்லோருக்கும் பொருந்த கூடியதேயாகும். உதாரணமாக, மருத்துவ(Doctor) படிப்பு, கணிப்பொறி(Computer Science, Engineering) சார்ந்த  படிப்பு, சான்றிதழ் படிப்புகளில் (ITI) அடங்கும் ஓராண்டு படிப்புகளான Fitter welder, Machinist, AC Mechanic போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. இவைகள் போன்ற அனைத்தும் ஒரு சாரரை சார்ந்தது அல்ல என்பது தங்களுக்கு தெரியாததொன்றுமில்லை. BA(History), BA(Islamic studies) போன்ற வரலாற்று சார்ந்த படிப்புகள் வேண்டுமானால் அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்களின் விருப்பபடி தேர்ந்தெடுக்கலாம்.

     கணிதப்பாடத்தில் படிக்கக்கூடிய வெக்டர் இயற்கணிதம், பகுமுறை வடிவியல், வகை நுண்கணிதம் போன்ற சிக்கலான கணக்கு பாடங்கள் எந்த வகையான மதச்சாயம் பூசப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. கணிதப்பாடங்கள்தான் கணினி, பொறியியல் போன்ற படிப்பிற்கு தேவையான அடிப்படை அறிவு ஆகும். அதை  நாம் புறம் தள்ளமுடியாது.

     இறைவன் மனிதனை படைத்து, அவனுக்கு உயிரைக் கொடுத்து அறிவைக் கொடுத்து, சிந்திக்கத் தூண்டுகிறான். இந்தியாவில் இருக்கும் எல்லா மதத்துவரும் இஸ்லாம் சொல்லியப்படிதான் சிந்திக்க வேண்டும் என்று சொல்லுவதே தவறு. முஸ்லிம் மக்களை வேண்டுமானால் அல்குரான், ஹதீஸ்களை ஆராய்ந்து அதன்படி சிந்திக்க, ஆராய்ச்சி செய்ய தூண்டலாம். அதே நேரத்தில், மாற்று மத நண்பர்கள் விருப்பினால் அவர்களுக்கு  அல்குரான், ஹதீஸ்களை விளங்க வைக்கலாம்.




ஒரு முஸ்லிம் என்பவன் எந்த மதத்தையும் சார்ந்த கருப்பரைரோ, வெள்ளையரைரோ, ஏழையையோ, பணக்காரயைரோ எல்லோரிடம் அன்பாக பழக கூடியவனாக இருக்க  வேண்டும். எனவே நாம் எல்லா மதங்களையும் சேர்ந்த மக்களை அனுசரித்து போவது தான் சாலச்சிறந்தது. அதற்காக தன் மார்க்க கொள்கையில் இருந்து விலகிவிட்டான் என்ற அர்த்தம் இல்லை.

     முஸ்லிம்களிடையே வாசிக்கும் பழக்கம்  குறைந்து வருகிறது. அவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இவ்விடத்தில் புத்தகம் ஒரு நல்ல நண்பன் என்ற பழமொழியை நினைவு கூற விரும்புகிறேன். அதுமட்டுமல்ல ஹதீஸில் "கல்வியை கற்பவனாக இரு, அல்லது கற்றுக் கொடுப்பவனாக இரு, அல்லது கற்பவருக்கு உதவி செய்பவனாக இரு, நான்காவது நபராக மட்டும் இருக்காதே" என்று கூறுவதன் மூலம் கல்வியுடன் தொடர்பு இல்லாமல் இருப்பது நபியுடைய கட்டளையை மீறும் செயல் என்றும் புலனாகிறது. ஆனால் நீ இந்த புத்தகத்தைதான் வாசிக்க வேண்டும் என்று யாரை நாம் கட்டாயப்படுத்த முடியாது. இது அவரவர் விருப்பு வெறுப்பைச் சார்ந்த விசயம். We can give our suggestion to read some particular books but we can’t force them.

     இந்திய கல்வி அமைப்பு இந்துத்துவாவை நோக்கி செல்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில், நாம் ஒன்றை ஒப்புக்கொன்று தான் ஆக வேண்டும், படிப்பு, அரசியல் நமக்கு ஆகாது என்று அவைகளை நாம் புறம்தள்ளி விட்டோம். அதனால் ஆட்சி அதிகாரம் இல்லாத காட்டை இழந்த சிங்கம் போல கர்சித்து கொண்டு இருக்கின்றோம். நம்மிடமுள்ள வேற்றுமை நீங்கி! ஒற்றுமை ஒங்க!! பாடுபட வேண்டும்.

    
என்றும் அன்புடன்,

-எம். எம். யூனுஸ் -

ஆவுடையார் பட்டினம்

Tuesday, 8 September 2015

Mobile Number Portability


Mobile Number Portability எனும் வசதி TROI கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.

STEP 1:
=====
முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.

STEP 2:
====
இப்போது உங்களுக்கு 1901 எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.

STEP 3:
=====
தங்கள் அருகாமையில் இருக்கும் எந்த ஒரு புதிய மொபைல் சேவை நிறுவன மையம் உள்ளதோ (நீங்கள் விரும்பும் ஏதேனும் Ex: BSNL, AirCell, Airtel, Vodafone, Docomo, Reliance) அங்கு செல்லவும்.

STEP 4:
=====
அவர்கள் தரும் சேவை மாற்று படிவத்தில் பின் வரும் தகவல்களைக் கொடுக்கவும்.
1.தற்போதைய மொபைல் எண்.
2.தற்போதைய மொபைல் சேவை நிறுவனம்.
3.UPC code

STEP 5:
=====
தங்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று, சுய கையோப்பமிட்ட புகைப்படம் மற்றும் கடந்த மாதத்தின் பில் (If it is postpaid). போன்றவற்றையும் கொடுக்கவும்.

STEP 6:
=====
அவர்கள் உங்களுக்கு புதிய SIM அட்டை கொடுப்பார்கள். சில நிறுவனம் இந்த புதிய SIM cardக் கென கட்டணம் கேட்டாலும் கேட்பார்கள். (Rs. 50 to Rs. 100)

STEP 7:
=====
உங்களின் புதிய நிறுவனம் பழைய நிறுவனத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி நீங்கள் கட்சி மாறி விட்டதாக தகவல் கொடுப்பார்கள். நீங்கள் அந்த பழைய SIM கார்டை எந்தத் தேதி வரை பயன்படுத்தலாம் எனும் தகவலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.

STEP 8:
=====
அதே நாள் அல்லது அடுத்த நாள் இரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உங்களின் மொபைல் சேவை 2 மணி நேரம் தூண்டிக்கப்படும்.

STEP 9:
=====
இப்போது நீங்கள் உங்களின் புதிய மொபைல் நிறுவன வாடிக்கையாளராக மாறிவிட்டீர்கள்.